ஈஷா சார்பில் பூச்சி மேலாண்மை குறித்த விவசாய களப்பயிற்சி

ஈரோடு மாவட்டத்தில் ஈஷா சார்பில் பூச்சி மேலாண்மை குறித்த விவசாய களப்பயிற்சி பூச்சியியல் வல்லுநர் திரு. செல்வம் அவர்கள் நடத்தினார்

Update: 2022-09-05 16:15 GMT

ஈஷா விவசாய இயக்கம் சார்பில் கோபியில் 'பூச்சிகளை கவனிங்க' என்ற தலைப்பில் விவசாய களப் பயிற்சி 2 நாட்கள் நடந்தது. பிரபல பூச்சியியல் வல்லுனர் திரு.செல்வம் அவர்கள் இப்பயிற்சியை நேரடியாக நடத்தினார்.

தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக ஈஷா விவசாய இயக்கம் பல்வேறு விதமோன களப்பயிற்சிகளை மாதந்தோறும் நடத்தி வருகிறது. அதன்படி , ஈரோடு மோவட்டம் கோபி தாலுகா மேவானி கிராமத்தில் உள்ள ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் 'பூச்சிகளை கவனிங்க' என்ற தலைப்பில் 2 நாட்கள் களப்பயிற்சி செப்டம்பர் 3 , 4 ஆகிய தேதிகளில் நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசோயிகள் பங்கேற்றனர்.


அவர்கள் பல்வேறு வகையான பூச்சி வகைகளின் தன்மைகள் மற்றும் பயன்களை அனுபவப்பூர்வமாக தெரிந்து கொள்ளும் வகையில் இந்த பயிற்சி வடிவமைக்கப்பட்டு இருந்தது.வி


வசாயிகள் தனிக் தனி குழுவாக பிரிந்து சென்று பண்ணையில் இருந்த பூச்சிகளை பார்வையிட்டனர். மேலும் , காலையில் பிடித்து வந்து பூச்சிகளை ஆய்வு செய்தனர்.பூச்சிகளின் உடலமைப்பு பற்றி விரிவாக புரிந்து கொள்வதற்கு விவசாயிகளே பூச்சிகளின் படங்களை வரைந்தனர். குறிப்பாக இயற்கை விவசாயத்தில் பூச்சிகளின் பங்கு , நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள் , நன்மை செய்யும் பூச்சிகளை வர வழைக்கும் வழிமுறைகள் , ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.

பூச்சிக்கொல்லிகளின் அதீத பயன்பாட்டால்தான் பயிர்களில் விஷத்தன்மை அதிகரிக்கிறது. ஆகவே , இதை முற்றிலும் தடுக்கும் விதமாக இயற்ளக முறையில் பூச்சிகளை மேலாண்மை செய்யும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

Similar News