50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட ஆலத்தூர் விஸ்வநாத சுவாமி கோவில் சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட ஆலத்தூர் விஸ்வநாத சுவாமி கோவில் சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-16 06:30 GMT

தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டு வெளிநாடுகளில் விற்கப்பட்ட பழமையான சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கண்டுபிடித்து வருகிறார்கள். இவற்றில் பெரும்பாலான சிலைகள் அமெரிக்காவில் உள்ள மியூசியங்களில் இருப்பது தெரியவந்துள்ளது.கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர் மாவட்டம் ஆலத்தூர் விஸ்வநாதசுவாமி கோவிலில் திருட்டுப் போன நின்ற நிலையில் இருக்கும் விஷ்ணு மற்றும் நடனமாடும் கிருஷ்ணர் சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் தேடி வந்தனர்.


துணை சூப்பிரண்டு சந்திரசேகரன் தலைமையிலான தனிபப்படை போலீசார் அந்த இரண்டு பழமையான சிலைகளும் அமெரிக்காவில் உள்ள மியூசியத்தில் இருப்பதை தற்போது கண்டுபிடித்துள்ளனர். அதை மீட்டு கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு போலீசார் தெரிவித்தனர். இந்த இரண்டு சிலைகளும் சோழர் காலத்து சிலைகள் என்று போலீசார் கூறினார்கள்.





 



Similar News