புதிய நாடாளுமன்றததை அழகு படுத்த இத்தனை வகை அழகு பொருட்களா? வியக்க வைத்த விஷயம்

நாடாளுமன்றத்தை அழகுபடுத்த பல மாநிலங்களில் இருந்து வந்த அழகுப் பொருள்கள்.

Update: 2023-05-27 14:30 GMT

புது நாடாளுமன்றம் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் கட்டிடத்தை கட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பொருட்கள் கொண்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற கட்டிட பணிகள் முடிவடைந்து நாளை பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது. இந்த கட்டிடத்தை கட்டுவதற்கு நாட்டின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பொருட்களை பயன்படுத்தி உள்ளனர்.


நம் நாடு பல்வேறு கலாச்சாரங்களை கொண்டது என்பதை பிரதிபலிக்கும் வகையில் கட்டிடத்துக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து பொருட்கள் தருவிக்கப்பட்டுள்ளன . உ.பி மாநிலம் மிர்சாபூரில் இருந்து தரை விரிப்புகள், திரிபுராவிலிருந்து மூங்கில் விரிப்புகள், ராஜஸ்தானில் இருந்து செதுக்கப்பட்ட கற்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.


ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் இருந்து பச்சை கற்கள், அஜ்மீரில் இருந்த கிரானைட் கற்கள், அம்பாச்சியில் இருந்து பலிங்கு கற்களும் கொண்டுவரப்பட்டன. மற்றும் மாநிலங்களவை கட்டிடத்திற்கு மேற்கூரை அமைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பிகளில் டாமன் மற்றும் டையூவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன .கூட்டு அரங்கில் உள்ள இருக்கைகள் மேஜைகள் உள்ளிட்ட மர சாமான்கள் மும்பையில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News