பாலக்கோட்டில் அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு.. அமைச்சர், கலெக்டர் பங்கேற்பு.!

பாலக்கோட்டில் அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு.. அமைச்சர், கலெக்டர் பங்கேற்பு.!

Update: 2020-02-16 10:09 GMT

தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் புதியதாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ரிப்பன் வெட்டி, மற்றும் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மலர்விழி, மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த புதிய காவல் நிலையம் திறக்கப்பட்டதால், பாலக்கோடு தொகுதியில் உள்ள பெண்கள் நேரடியாக புகார்கள் அளிக்க முடியும்.

முன்பு பாலக்கோட்டில் உள்ள பெண்கள் தங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் பென்னாகரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

தற்போது புதிய காவல் நிலையம் திறக்கப்பட்டதால் பெண்கள் தங்களின் புகார்களை பாலக்கோட்டில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளிக்கலாம். 

Similar News