இந்தியாவில் தங்க விருப்பம் தெரிவிக்கும் அமெரிக்கர்கள், அனைவருக்கும் பிடித்த நாடாக மாறும் இந்தியா.!

இந்தியாவில் தங்க விருப்பம் தெரிவிக்கும் அமெரிக்கர்கள், அனைவருக்கும் பிடித்த நாடாக மாறும் இந்தியா.!

Update: 2020-04-13 14:13 GMT

இந்தியாவில் இருக்கும் அமெரிக்கர்களை அழைத்து வர அமெரிக்கா அரசு தெரிவித்த போது இங்கு இருக்கும் அமெரிக்கர்கள் இந்தியாவில் இருக்கிறோம் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதில் அமெரிக்காவில் 5 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டினர் அவர்களுடைய சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த வரிசையில் சென்ற வார இறுதியில் டெல்லியில் இருந்த ஆஸ்திரேலியா நாட்டினர் 444 பேர் மெல்போர்னுக்கு சிறப்பு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதைப்போலவே வெளி நாடுகளில் இருக்கும் அமெரிக்கர்களை அழைத்துவர அமெரிக்க அரசு சிறப்பு விமானங்களை இயக்கியது. அந்த சிறப்பு விமானங்கள் மூலம் இதுவரை 50 ஆயிரம் பேர் கூட்டி வரப்பட்டதாக அமெரிக்க அதிபர் தெரிவித்திருந்தார்.

இந்தத் தருணத்தில் இந்தியாவில் இருக்கும் அமெரிக்கர்கள் இங்கேயே இருக்கிறோம் என விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனை பற்றி வாஷிங்டன் டி.சி.,யில் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி கூறுகையில், அமெரிக்காவை சேர்ந்த மக்கள் இந்தியாவில் ஆயிரக்கணக்கான பேர் உள்ளனர். அவர்களை இந்த வாரத்தில் சிறப்பு விமானம் மூலம் அழைத்து வர 800 பேரிடம் கூறினோம்.

இதில் 10 பேர் மட்டும் தான் எங்கள் நாட்டுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர் மீதி இருக்கும் அனைவரும் இந்தியாவில் இருக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.மேலும் இந்தியா, 24,000 அமெரிக்கர்களை கண்காணித்து வருகின்றனர் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2520575

Similar News