தளபதி பட ஸ்டைலில் திகழும் நட்பு - நட்பின் இலக்கணமாய் திகழும் அமித் ஷா - மோடி வெற்றி கூட்டணி

தளபதி பட ஸ்டைலில் திகழும் நட்பு - நட்பின் இலக்கணமாய் திகழும் அமித் ஷா - மோடி வெற்றி கூட்டணி

Update: 2019-05-25 05:47 GMT

நட்புக்கு இலக்கணம் தேவை என்றால் மோடி-அமித் ஷாவை பார்த்து தெரிஞ்சுக்கலாம். கடந்த முப்பது ஆண்டுகளாக நல்ல நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். மோடியின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் அமித் ஷா, நாடாளுமன்ற தேர்தல் வெற்றியின் 'சாணக்கியனாக' திகழ்கிறார்.





குஜராத் மாநிலத்தில் பஞ்சாயத்து அளவில் அரசியல் வாழ்க்கையை துவக்கிய இவர்கள், தற்போது நாடாளுமன்றம் வரை வெற்றிப் பயணம் செய்துள்ளனர். 1982 ல் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு மூலம் மோடியை முதல் முறையாக சந்தித்தார் அமித் ஷா . அப்போது ஆரம்பித்தது இந்த நட்பு. 1986 ல் பா.ஜ.க .,வில் அமித் ஷா சேர்ந்தார். அடுத்த ஆண்டு மோடியும் பா.ஜ.க.,வில் இணைந்தார்.





1995 ல் குஜராத்தில் கேசுபாய் படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைத்தது. அப்போது காங்கிரசின் ஆதிக்கத்தை கிராமப்புறங்களில் அகற்ற மோடி-ஷா இணைந்து பணியாற்றினார். 8 ஆயிரம் கிராமப்புற தலைவர்கள் உள்ளடக்கிய 'நெட் வொர்க்' அமைத்தனர்.





கூட்டுறவு சங்கங்களிலும் காங்கிரஸ் தாக்கத்தை தகர்த்தனர். ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவரானார் அமித் ஷா. அப்போது அந்த வங்கி நஷ்டத்தில் ஓடி கொண்டிருந்தது. அடுத்த ஆண்டு ஷா முயற்சியால் ரூ. 2.7 கோடி லாபம் ஈட்டியது. இந்த வங்கியின் லாபம் ரூ. 250 கோடியாக உயர்ந்தது.அடுத்து குஜராத் கிரிக்கெட் சங்கத்தில் காங்கிரஸ் வளர்ச்சியை இருவரும் சேர்ந்து முடக்கினர். 2002ல் மோடி முதல்வராக இருந்த போது இளம் அமைச்சரானார் அமித் ஷா. உள்துறை, சட்டம், நீதி, போக்குவரத்து உள்ளிட்ட 12 இலாகாக்களை கவனித்தார்.





மோடியின் தொலைநோக்கு சிந்தனைகளை செயல்படுத்துவதில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா வல்லவர். துல்லியமான வியூகங்களால் வெற்றியை கொண்டு வருவார். இருவரும் மக்களை நேரில் சந்திப்பதில் ஆர்வம் கொண்டவர்கள். தேசப்பற்றுமிக்கவர்கள்.





மோடியின் விருப்பத்திற்கு ஏற்ப, 10 கோடி உறுப்பினர்களை சேர்த்து உலகின் மிகப் பெரும் கட்சியாக பா.ஜ.க ,வை மாற்றினார் அமித் ஷா . 2019 லோக்சபா தேர்தலில் 312 லோக்சபா தொகுதிகளில் 161 பேரணிகள் நடத்தினார். 1.58 லட்சம் கி.மீ., பயணம் மேற்கொண்டார்.பிரதமர் மோடியின் ஒவ்வொரு அசைவையும் அறிந்து செயல்படுவார் அமித் ஷா. இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருப்பதால் தொட்டதெல்லாம் பொன்னாகிறது.



Similar News