அமித்ஷாவின் அடுத்த அதிரடி! காஷ்மீரில் மேலும் 28,000 பாதுகாப்பு படை வீரர்கள் குவிப்பு! பீதியில் உறைந்தனர் பயங்கரவாதிகளும், பிரிவினைவாதிகளும்!!

அமித்ஷாவின் அடுத்த அதிரடி! காஷ்மீரில் மேலும் 28,000 பாதுகாப்பு படை வீரர்கள் குவிப்பு! பீதியில் உறைந்தனர் பயங்கரவாதிகளும், பிரிவினைவாதிகளும்!!

Update: 2019-08-02 07:37 GMT


காஷ்மீரில் முஸ்லிம் பயங்கரவாதிகளை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழிக்கும் மகத்தான பணியை கையில் எடுத்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த ஆண்டு காஷ்மீரில் உள்ள அனைத்து கிராமங்களிலும், அதன் பஞ்சாயத்து தலைவர்களால் கொடியேற்றும் நிகழ்ச்சியை ஆகஸ்ட் 15-இல் நடத்த உத்தரவிட்டுள்ளார்.


காஷ்மீரில் களையெடுக்கும் பணிக்கு, மத்திய அமைச்சர் அமித்ஷா ‘மிஷன் காஷ்மீர்’ என்று பெயர் சூட்டி உள்ளார்.


அமித்ஷா ‘மிஷன் காஷ்மீர்’ ஆபரேஷனுக்காகத்தான் கடந்த சில நாட்களில் சுமார் 12,000 பாதுகாப்பு படையினர் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 


இந்த நிலையில் தற்போது கூடுதலாக 28,000 பாதுகாப்பு படை வீரர்கள் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளனர். 


காஷ்மீரில் படிப்படியாக படைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. முக்கிய பகுதிகள் ரிசர்வ் படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு வழக்கத்திற்கு மாறாக 10 நாட்கள் முன்பாகவே கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல, விமானப்படை மற்றும் ராணுவத்தை உஷார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதனால், காஷ்மீரில் உள்ள முஸ்லிம் பயங்கரவாதிகளும், அவர்களுக்கு துணைபோகும் காஷ்மீர் முஸ்லிம்களும் பீதியடைந்துள்ளனர். அமித்ஷாவின் அதிரடியால் அவர்கள் நிலை குலைந்து போய் உள்ளனர்.


கஷ்மீருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் விடிவுகாலம் பிறக்கப்போகிறது என்பது இதன்மூலம் தெரிகிறது. அநேகமாக அது ஆகஸ்ட் - 15 அன்று நடக்கலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.


Similar News