வாரிசு அரசியல் குறித்து அமித்ஷாவின் ஆவேசம்

வாரிசு அரசியல் விஷம் போன்றது. ஒரே குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சியும் ஆட்சியும் இயங்குகின்றன என்று அமித்ஷா கூறினார்.

Update: 2023-08-21 11:15 GMT

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்றார். மாநில அரசின் சாதனை அறிக்கையை வெளியிட்டார். பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பா.ஜனதாவிலும் வாரிசு அரசியல் நிலவுவதாகவும் பா.ஜனதா தலைவர்களின் குடும்பத்தினருக்கு டிக்கெட் கொடுக்கப்படுவது பற்றியும் கேட்கப்பட்டது . அதற்கு அமித்ஷா கூறியதாவது:-


எங்காவது ஒரு சிலருக்கு தகுதி அடிப்படையில் டிக்கெட் கொடுக்கப்பட்டு இருக்கலாம். அதை வைத்து வாரிசு அரசியல் பிரச்சினையை நீர்த்து போக செய்யாதீர்கள். வாரிசு அரசியல் விஷம் போன்றது. நான் யாரையும் குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை. காங்கிரஸ் தி.மு.க உத்தவ்தாக்கரே சிவசேனா ஆகிய கட்சிகள் வாரிசு அரசியல் செய்கின்றன. அங்கு ஒரே ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் கட்சியும் ஆட்சியிலும் வர முடியம்.


அதைத்தான் வாரிசு அரசியலில் என்று அழைக்க முடியும் . ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சியும் ஆட்சியும் இயங்குகின்றன. அப்படியானால் கீழ் மட்டத்தில் இருந்து வருபவர்களின் கதி என்ன? நான் பா.ஜனதா தலைவராக இருந்தேன் என் குடும்பத்தைச் சேர்ந்தவர் யாரும் அரசியலில் இல்லை. நட்டா குடும்பத்தைச் சேர்ந்தவர் யாரும் அரசியலில் இல்லை. வாஜ்பாய் பிரதமர் மோடி ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் போன்றவர்கள் எந்த அரசியல் குடும்பப் பின்னணியும் இல்லாதவர்கள்.


வாரிசு அரசியலில் அதிகாரம் முழுவதும் ஒரு குடும்பத்தின் கையில் இருக்கும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது 2ஜி நிலக்கரி, சத்தியம், ஆதர்ஷ், எல்.ஐ.சி உட்பட 24 ஊழல்கள் நடந்துள்ளன. அவை பற்றி விசாரணை நடந்து வருகிறது. அரசியல் பழிவாங்குதல் அடிப்படையில் நாங்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. கோர்ட் விதிமுறைகளுக்கு ஏற்ப விசாரணை நடந்து வருகிறது. முன்னாள் முதல் மந்திரி கமல் நாத் எந்த தவறும் செய்யக்கூடாது. இல்லாவிட்டால் விசாரணையின் வேகம் அதிகரிக்கும் இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Similar News