மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமரின் பாராட்டு பெற்ற ஆட்டோ டிரைவர் மற்றும் ஹைதராபாத் சிறுமி!

புறாக்களை பராமரித்து வரும் சென்னை ஆட்டோ டிரைவருக்கும் ஏழு நூலகங்கள் அமைத்த ஹைதராபாத் சிறுமிக்கும் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-25 12:15 GMT

மனிதன் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது :-


தமிழ்நாட்டில் சென்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் எம். ராஜேந்திர பிரசாத் ஒரு தனித்துவமான பணியை செய்து வருகிறார் . அவர் 25 முதல் 30 ஆண்டுகளாக புறாக்களுக்கு சேவை செய்து வருகிறார். அவரே தனது வீட்டில் 200-க்கும் மேற்பட்ட புறாக்களை பராமரித்து வருகிறார் . அந்த புறாக்களுக்கு உணவு , தண்ணீர் சுகாதாரம் என்று அனைத்து தேவைகளையும் தானே கவனித்துக் கொள்கிறார். இதற்காகவே நிறைய பணம் செலவழித்துள்ளார் . இருப்பினும் தனது பணியில் உறுதியாக இருக்கிறார்.


நண்பர்களே நல்ல நோக்கத்துடன் பணிகளை செய்யும் நபர்களை பார்க்கும்போது நிறைய திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். இதேபோல தெலுங்கானா மாநிலம் பேகும்பேட்டில் உள்ள ஹைதராபாத் பப்ளிக் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் ஆகர்ஷனா சதீஷ் என்ற மாணவியையும் பிரதமர் மோடி பாராட்டினார். அந்த சிறுமி தன் அண்டை வீட்டுக்காரர்கள் , வகுப்பு தோழிகள், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் பழைய புத்தகங்களை சேகரித்து ஹைதராபாத்தில் ஏழு நூலகங்களை சொந்தமாக அமைத்துள்ளார். அவரது முயற்சிக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.


SOURCE :DAILY THANTHI

Similar News