முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமனம்

முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல் அணில் சவுகணை மத்திய அரசு நியமித்துள்ளது

Update: 2022-09-29 04:45 GMT

முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பதவி வகித்த பிபின் ராவத் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீலகிரியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். அதன் பிறகு கடந்த 9 மாதங்களுக்கு மேலாக முப்படை தலைமை தளபதி பதவி காலியாகவே இருந்தது. இந்த நிலையில் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல் அனில் சவுகானை மத்திய அரசு நியமித்துள்ளது. அதோடு அடுத்த உத்தரவு வரும் வரை ராணுவ விவகாரத்துறை செயலாளராகவும் அனில் சவுகான் செயல்படுவார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


1961 ஆம் ஆண்டு பிறந்த அனில் சவுகான் இந்திய ராணுவ அகாடமி மற்றும் தேசிய பாதுகாப்பு அகாடமிகளில் படித்தார்.1981 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார்.ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு மேல் ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் கிளர்ச்சி நடவடிக்கைகளை அடக்கிய பணியில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார். ராணுவத்தில் பல பதிவுகளை வகித்தவர். கடந்த ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்றார்.


ஓய்வு பெற்ற பிறகும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் அவர் தொடர்ந்து முக்கிய பங்களித்து வந்தார். ராணுவத்தில் அவர் பரம் விசிஷ்ட் சேவா,உத்தம்யுத் சேவா,அதி விசிஷ்ட் சேவா மற்றும் சேனா உள்ளிட்ட பதக்கங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





 


Similar News