அரியலூர் கோவிலில் திருட்டு போன ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு

அரியலூர் கோவிலில் திருட்டுப் போன ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டுள்ளது.

Update: 2023-03-24 05:45 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகில் உள்ள பொட்டவெளி வெள்ளூர் கிராமத்தில் மிகவும் பழமையான வரதராஜ பெருமாள் உடனுறை ஸ்ரீதேவி, பூதேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2012 ஆம் ஆண்டு வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆஞ்சநேயர் ஐம்பொன் சிலைகள் திருட்டுப் போய்விட்டது. செந்துறை போலீசார் முதலில் இந்த வழக்க விசாரித்தார்கள். பின்னர் இந்த வழக்கை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.


கூடுதல் டி.ஜி.பி சைலேஷ் குமார் யாதவ் மேற்பார்வையில் இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். திருட்டுப்போன நான்கு சிலைகளில் ஆஞ்சநேயர் சிலை மட்டும் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள கிறிஸ்டி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு பின்னர் அந்த சில ஏலம் விடப்பட்டு ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது தெரிந்தது. சிலையை திருடிய கும்பல் அமெரிக்காவிற்கு கடத்திச் சென்றது கண்டறியப்பட்டது.


இந்த தகவல் தெரிந்து முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட இந்திய ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க தூதரகங்கள் மற்றும் இந்திய தொல்லியல் துறை வாயிலாக குறிப்பிட்ட ஆஞ்சநேயர் சிலை 11 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப பெறப்பட்டது. டெல்லியில் தொல்லியல் துறையினரிடம் இருந்து பெறப்பட்ட ஆஞ்சநேயர் சிலை கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.




Similar News