தமிழகத்தில் மேலும் ஒரு விசாரணை கைதி மர்மமான முறையில் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-04-29 04:00 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



திருவண்ணாமலை மாவட்டம் இளையங்கண்ணியை அடுத்த தவணை தட்டாரனை கிராமத்தில் பழங்குடி மலைகுறவர் இனத்தைச் சேர்ந்தவர் தங்கமணி இவரை கடந்த 21 தேதி காவல் நிலைய ஆய்வாளர் நிர்மலா, காவலர் பழனி ஆகியோர் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்மீது சாராயம் விற்பனை செய்வதாக கூறி சிறையில் அடைத்துள்ளனர் காவல்துறையினர்.

அதன்பின் தங்கமணிக்கு 27 'ம் தேதி உடல்நிலை சரியில்லாததால் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர், ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தங்கமணி இறந்து செய்தி அவரது குடும்பத்தாருக்கு தெரிய வர அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர் மர்ம மரணம் தொடர்பாக நீதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் பணம் கேட்டு மிரட்டி தனது தந்தையை கொன்று விட்டதாக தங்கமணியும் மகன் பரபரப்பு புகாரை தெரிவித்திருக்கிறார்.

காவல்துறையினர் அப்பகுதி மக்களிடம் லஞ்சம் கேட்டு அடிக்கடி தொல்லை கொடுப்பது புதிதல்ல என்பது தான் அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் அதிர்ச்சி தகவல், இதுபோல் சில ஆண்டுகளுக்கு முன்னரே மர்மமான முறையில் ஒருவர் இறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிட்டுச் சொல்கிறார் இளையங்கண்ணியை கிராம பஞ்சாயத்து தலைவர் கார்த்திக்.

தங்கமணியின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்த இந்த மரணத்தில் தொடர்பு உடைய அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர், அதனடிப்படையில் மர்ம மரணம் குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

சின்ன விசாரணை விசாரித்து விட்டு அனுப்பி விடுகிறோம் என காவலர்கள் அழைத்துச் செல்லப்பட்ட அவர் இறந்து விட்டதாக வந்த செய்தி தங்கமணி குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Source - News 7 Tamil


Similar News