ஏ.ஆர்.ரகுமான் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு - 6 கோடி செலுத்த நோட்டீஸ்

ஏ.ஆர்.ரகுமான் வரி ஏய்ப்பு செய்ததாக தொடர்ப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய ரகுமான் மனுதாக்கல்.

Update: 2022-09-29 10:40 GMT

ஏ.ஆர்.ரகுமான் வரி ஏய்ப்பு செய்ததாக தொடர்ப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய ரகுமான் மனுதாக்கல்.

இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர் ரகுமான். இவர் தமிழ் மட்டுமல்லால் மற்ற தென்னிந்திய மொழிகள், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிபடங்களும் இசையமைத்து வருகிறார். இவரின் இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், இவர் ஜி.எஸ்.டி வரியை செலுத்தாமல் மோசடி செய்ததாக கூறி ரூ.6.79 கோடி வரி மற்றும் ரூ.6.79 கோடி அபராதம் செலுத்தக் கோரி ஜிஎஸ்டி ஆணையம் அவருக்கு கடந்த 2019ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மட்டிமின்றி திரையுலகினர் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நோட்டீஸ்க்கு எதிராக ஏ.ஆர் ரகுமான் எதிர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவர் தாக்கல் செய்திருந்த எதிர்மனுவில் ரூ.6.79 கோடி வரி மற்றும் ரூ.6.79 கோடி அபராதம் செலுத்தக் கூறுவது அபத்தமானது எனவும் ஒரு படத்திற்கான இசை காப்புரிமை அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு சொந்தமான பின் தன்னை அதற்காக வரி செலுத்த சொல்வது சட்டவிரோதமானது என தெரிவித்திருந்தார். இதன் மூலம் தனது புகழுக்கு கலங்கம் விளைவிக்க முயற்சி செய்வதாக தெரிவித்திருந்தார். இந்த வழக்கு கடந்த மூன்றாண்டுகளாக நடந்து வரும் நிலையில், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் கேட்டுகொண்டார்.

இதற்கு பதில் அளித்துள்ள ஜிஎஸ்டி ஆணையம், ஆணையர், ஏ.ஆர்.ரகுமான் வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையிலேயே நோட்டீஸ் அனுப்பபட்டதாக தெரிவித்தனர். ஒரு படத்திற்குஇசையமைக்கும் இசையமைப்பாளர், அந்த படத்தின் இசைக்கான காப்புரிமையை முழுமையாக தயாரிப்பாளருக்கு வழங்கினால் அதற்கான சேவை வரி விலக்கு அளிக்கும் நடைமுறை உள்ளது. ஆனால், ஏ. ஆர் ரகுமான் முழுகாப்புரிமை வழங்குவதில்லை எனவும் அதற்காக 6 கோடியே 79 லட்ச ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், அவரின் புகழிற்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் ஏதுவும் செய்யவில்லை எனவும் திரட்டபட்ட ஆதாரங்களின் அடிப்படையிலேயே வரி விதிக்கப்பட்டதாகவும், அதை செலுத்தாததால் ரூ.6 கொடியே 79 அபராதமும் விதிக்கப்பட்டதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Source - Asianetnews Tamil

Similar News