சென்னை - கோவை 'டிபன்ஸ் காரிடார்' திட்டத்தை விரைந்து முடிக்க ராணுவ அமைச்சர் உத்தரவு!!

சென்னை - கோவை 'டிபன்ஸ் காரிடார்' திட்டத்தை விரைந்து முடிக்க ராணுவ அமைச்சர் உத்தரவு!!

Update: 2019-07-17 07:19 GMT


ராணுவ தளவாடப் பொருட்களை, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வற்காக, கடந்த, 2018 - ஆம் ஆண்டு, அப்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, இரண்டு 'டிபன்ஸ் காரிடார்' திட்டங்களை அறிவித்தார். முதலாவது, டிபன்ஸ் காரிடார், தமிழகத்தில் சென்னையை மையமாக கொண்டு, தொழில் நகரங்களான கோவை, திருச்சி, சேலம், ஒசூரை இணைக்கும் விதத்தில், அமைக்கப்படுகிறது. இரண்டாவது, 'டிபன்ஸ் காரிடார்' உத்தரபிரதேச மாநிலத்தில் அமைக்கப்படுகிறது.


இதற்கு முன்னோட்டமாக, அப்போதைய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் முயற்சியால், நமது நாட்டின் ராணுவத் தளவாட உற்பத்தித் திறனை வெளிப்படுத்தும் வகையில் சென்னை, கோவையில் கண்காட்சிகள் நடத்தப்பட்டன. கோவையில், ஏற்கனவே ராணுவத்தளவாட உற்பத்தியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.


இந்நிலையில், 'டிபன்ஸ் காரிடார்' பணிகளின் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்தும், இதுவரை நடந்துள்ள அமலாக்கப் பணிகள் குறித்தும், டெல்லியில் நேற்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆய்வு செய்தார். அப்போது, 'டிபன்ஸ் காரிடார்' பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.


இதில் முதலீடு வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்தும், கட்டமைப்பு பணிகள் குறித்தும் அவர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். ஆய்வுக் கூட்டத்தில், ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 


Similar News