அவசர அவசரமாக ஆவணங்களை எரிக்கும் சீன தூதரகம் - உலகம் முழுக்க சீனாவின் சதி அம்பலம் - 72 மணி நேரத்திற்குள் பெட்டி படுக்கையோடு கிளம்ப அமெரிக்கா உத்தரவு!

அவசர அவசரமாக ஆவணங்களை எரிக்கும் சீன தூதரகம் - உலகம் முழுக்க சீனாவின் சதி அம்பலம் - 72 மணி நேரத்திற்குள் பெட்டி படுக்கையோடு கிளம்ப அமெரிக்கா உத்தரவு!

Update: 2020-07-23 07:49 GMT

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா பரவ காரணம் சீனா தான் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார்.

இதனைத்தொடர்ந்து சீனா மீது பல்வேறு கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்து வந்த நிலையில், தற்போது டெக்ஸாஸ் மாகாணத் தலைநகரான ஹூஸ்டன் நகரில் செயல்பட்டு வந்த சீன துணை தூதரகத்தை 72 மணி நேரத்துக்குள் மூட வேண்டுமென்று அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள மருத்துவ ஆராய்ச்சி மைய தரவுகளை, சீன துணை தூதரகம் திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

குடியரசுக் கட்சியின் புளோரிடா மாகணத்தை சேர்ந்த செனட்டர் மார்கோ ரூபியோ தன் ட்விட்டர் பதிவில் " சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உளவாளியாக ஹூஸ்டன் தூதரகம் செயல்பட்டுள்ளது. இது ராஜாங்க ரீதியிலான உறவுகளை மேற்கொள்ளும் மையம் அல்ல'' என்று தெரிவித்துள்ளார்.

தற்போது சீன தூதரகத்தை மூட உத்தரவிட்ட சில மணி நேரத்துக்குள் கட்டடத்தின் உள்ளே முக்கிய ஆவணங்கள்  எரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அங்கு ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாக தீயணைப்பு வண்டிகள் அந்த கட்டத்தை நோக்கி சென்ற நிலையில், தீயணைப்பு வீரர்கள் கட்டடத்தினுள்ளே அனுமதிக்கப்படவில்லை. 

இதனால், சீன தூதரகத்துக்குள் முக்கியமான ஆவணங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், தூதரகத்தினுள்ளே ஆவணங்கள் எரிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் மேலும் சில சீன மையங்களும் மூட யோசித்து வருகிறோம் '' என்றார்.அமெரிக்க அரசின் உத்தரவின்படி, நாளை மாலை 4 மணிக்குள் தூதரகம் மூடப்பட்டு விட வேண்டும்.

Similar News