மத்திய அரசின் பொது சிவில் சட்டம் குறித்து கருத்து கேட்பு - இந்து முன்னணி வரவேற்பு
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் வெளியிட்டில் அறிக்கையில் கூறியிருப்பதாவது
நமது நாட்டில் அரசியல் சாசன சட்டத்தை வரையறை படுத்தி தொகுத்த அறிஞர்கள் பொது சிவில் சட்டம் கொண்டு வரவே விரும்பினார்கள். ஆனால் மத கோட்பாடுகளை அது கட்டுப்படுத்தும் என கருதிய நேரு போன்ற முதுகெலும்பில்லாத சிலரின் வற்புறுத்தலின் காரணமாக மதத்திற்கு ஒரு சட்டமாக தற்காலிக ஏற்பாடாக அது அமைந்தது.
இந்த நிலையில் மத்திய சட்டவாரியம் பொது சிவில் சட்டம் பற்றி பொதுமக்களின் கருத்தை கேட்டுள்ளது. இதனை பயன்படுத்தி மக்கள் அனைவரும் பொது சிவில் சட்டம் அமல்படுத்த ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.