நிவாரணப் பணிகளில் முன் நின்று பாராட்டுக்களை அள்ளும் பா.ஜ.க எம்.எல்.ஏ.! #Assam #Flood #BJP

நிவாரணப் பணிகளில் முன் நின்று பாராட்டுக்களை அள்ளும் பா.ஜ.க எம்.எல்.ஏ.! #Assam #Flood #BJP

Update: 2020-07-15 12:06 GMT

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. வெள்ளம் என்றால் வெளியே கூட வராத அரசியல்வாதிகள் மத்தியில் அஸ்ஸாம் மாநிலத்தின் கும்டய் தொகுதி எம்எல்ஏ ம்ருணாள் சக்கியாவின் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

பிரம்மபுத்திராவில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் கும்டய் பகுதியை வெகுவாக பாதித்துள்ள நிலையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மனிதர்களையும் கால்நடைகளையும் நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்வது, சமையலறைகள் நிறுவுவது, உணவுப் பொருட்கள் விநியோகம் என பிற நிவாரணப் பணிகளில் ஈடுபடுவது என்று தானே முன் நின்று நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இரண்டு நாட்களுக்கு முன் மார்பளவு வெள்ள நீரில் சென்று மண்குடிசையில் மாட்டிக் கொண்டு தவித்த ஒரு இளம் தாயையும் அவரது இரு குழந்தைகளையும் மீட்கும் வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அவரால் தொடங்கப்பட்ட நடமாடும் சமயலறை மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பயனடைவதையும் வீடியோவாக பகிர்ந்திருந்தார்.

மேலும், முழங்காலளவு நீரில் இறங்கி ஒரு ஆட்டு மந்தையையும் வெள்ளத்தில் இருந்து மீட்டிருக்கிறார். இதையடுத்து நெட்டிசன்களும் மூத்த கட்சித் தலைவர்களும் அவரைப் பாராட்டி வருகின்றனர். எம்எல்ஏ ஆவதற்கு முன்பிருந்தே ம்ருணாள் சக்கியா சமூக சேவையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் என்றும் அதன் மூலம் அவருக்கு கிடைத்த நற்பெயரால் தான் பா.ஜ.கவில் எம்எல்ஏ வாக போட்டியிடும் வாய்ப்பே கிடைத்தது என்றும் உள்ளூர் வாசிகள் கூறியுள்ளனர்.

அடிக்கடி வெள்ள பாதிப்பு ஏற்படும் அஸ்ஸாமில் சக்கியா எப்போதுமே நிவாரணப் பணிகளில் முன் நிற்பார் என்று கூறப்படுகிறது.

நன்றி : ஸ்வராஜ்யா

Similar News