ஜார்கண்டில் இன்று சட்டசபை தேர்தல்! பாஜக அலையால் நக்சல்கள் ஆத்திரம்! குண்டு வைத்து பாலத்தை தகர்த்தனர்!

ஜார்கண்டில் இன்று சட்டசபை தேர்தல்! பாஜக அலையால் நக்சல்கள் ஆத்திரம்! குண்டு வைத்து பாலத்தை தகர்த்தனர்!

Update: 2019-11-30 11:22 GMT

ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்கட்டமாக 13 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி 48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகின. மேலும் மக்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிகளில் பெருமளவில் குவிந்துள்ளனர்.


இந்த நிலையில் நக்சல்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள இடங்களில் ஏற்கனவே பாஜக அரசு எடுத்து வரும் நேர்முக மற்றும் மறைமுக நடவடிக்கைகளால் நக்சல்கள் பலம் குறைந்து விட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நக்சல்கள் பாஜகவுக்கு வாக்களிக்கக் கூடாது என மக்களை வலியுறுத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் நக்சல்களின் மிரட்டலை மீறி மக்கள் வாக்களிக்க திரளாக செல்கின்றனர். மேலும் பாஜக அலை மாநிலமெங்கும் வீசுவதால் ஏராளமான வாக்குச்சாவடிகளில் பாஜகவுக்கும், காங்கிரசாருக்கும் இடையே கைகலப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த நக்சல்பாரிகள் கும்லா மாவட்டத்தில் உள்ள காக்ரா-காத்கோத்வா நகரங்களுக்கு இடையே விஷ்னுப்பூர் என்ற இடத்தில் உள்ள தரைப்பாலத்தை இன்று வெடிகுண்டுகள் மூலம் தகர்த்தனர்.





நக்சலைட் அதிகமாக இருக்கும் இடங்களில் ஆயிரத்து 97 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 461 வாக்குப்பதிவு மையங்கள் மிகவும் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு அமைதியாக நடக்கும் வகையிலும், நக்சலைட்டுகளால் எந்தவிதமான பிரச்சினையும் வராமல் இருக்கும் வகையிலும் ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பலமாக போடப்பட்டுள்ளது.


இதனால் அதிக அளவில் மக்கள் வெளி வந்து வாக்களிக்கத் தொடங்கியதால் அவர்களை மிரட்டும் வகையில் நக்சல்கள் பாலத்தை தகர்த்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் வாக்குப் பதிவு எதிர்பார்த்த அளவில் தொடர்ந்து நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. 


Translated Article From INTODAY


Similar News