சி.பி.எம் பிரமுகர் கொலை வழக்கு - சாட்சியங்கள் போலி என ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் 13 பேர் அதிரடி விடுதலை

கேரளாவில் சி.பி.எம் பிரமுகர் கொலை செய்ததாக புணையப்பட்ட வழக்கில் தற்பொழுது ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் 13 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-07-13 09:59 GMT

கேரளாவில் சி.பி.எம் பிரமுகர் கொலை செய்ததாக புணையப்பட்ட வழக்கில் தற்பொழுது ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் 13 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கேரளாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த மோதலில் சி.பி.ஐ.எம்'மின் பிரமுகர் விஷ்ணு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 13 ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களை குற்றவாளிகள் என வழக்கு பதிந்து சிறையில் அடைத்தது கேரளா போலீஸ், இந்நிலையில் கடந்த 2008இல் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு இறுதி தீர்ப்பு வழங்கியது, தீர்ப்பின்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப் பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பி விஜய பானு மற்றும் பி. இராமன் பிள்ளை ஆகியோர் ஆர்.எஸ்.எஸ் தரப்பினர் மீதான குற்றச்சாட்டில் உண்மை இல்லை எனவும் ஆனங்கட்சி தரப்பில் உயிரிழந்துள்ளதால் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாதகமாக வழக்கு விசாரிக்கப்பட்டு ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன எனவும் வாதாடினர்.


மேலும் நேரில் பார்த்ததாக ஆச்சார்ப்படுத்தப்பட்ட சாட்சியங்கள் முன்னுக்கு பின்னாக பதில் அளித்த காரணத்தினால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் இந்த நீதிமன்றம் விடுவிப்பதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சி தொடுத்த வழக்கில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் விடுவிக்கப்பட்டிருப்பது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Source - One India

Similar News