கடந்த 9 ஆண்டுகளாக விவசாயிகள் நலனிலும் கிராமங்களின் வளர்ச்சியிலும் மாஸ் காட்டிய மோடி அரசு

மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளாக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

Update: 2023-07-28 10:30 GMT

பிரதமர் மோடி நேற்று ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பல்வேறு திட்டங்களை தொடங்கியும் வைத்தார். அத்துடன் நாடு முழுவதும் விவசாயிகளுக்காக 1.25 லட்சம் கிசான் சம்ரிதி கேந்திராக்களை அர்ப்பணித்தார். இது விவசாயிகளின் அனைத்து தேவைகளுக்குமான ஒரே மையமாக விளங்கும். இந்த நிகழ்ச்சியில் பேசும்போது பிரதமர் மோடி கூறியதாவது:-


மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளாக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுத்து வருகிறது. விதைகள் முதல் விளைபொருள்கள் சந்தைப்படுத்துவது வரை அனைத்து வசதிகளையும் அவர்களுக்கு செய்து வருகிறது. யூரியா விலை உயர்வால் விவசாயிகள் அவதிப்பட எங்கள் அரசு அனுமதிக்காது. அந்த வகையில் இந்தியாவில் விவசாயிகள் ஒரு மூட்டை யூரியாவை ரூபாய் 266-க்கு பெறுகிறார்கள். ஆனால் இது பாகிஸ்தானில் ரூபாய் 800க்கு விற்கப்படுகிறது. மேலும் வங்காளதேசத்தில் 720க்கும் சீனாவில் 2,100 க்கும் விற்பனை ஆகிறது. நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டுள்ள கிசான் சம்ரிதி இயந்திரங்கள் விவசாயிகளின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும்.


கிராமங்கள் வளர்ந்தால் மட்டுமே இந்தியா வளர்ச்சி அடையும். எனவே நகரங்களில் கிடைப்பது போன்ற அனைத்து வசதிகளும் கிராமங்களில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ராஜஸ்தானில் நவீன உள்கட்ட அமைப்புகளை உருவாக்குவதே மத்திய அரசின் முன்னுரிமையாகும். இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டும் பங்கேற்க இருந்தார். ஆனால் அவரது காலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பங்கேற்கவில்லை. அவர் கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்டு  உள்ளார்.அவரது உடல் நலத்துக்காக பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Similar News