நைஜீரியாவில் கழுதைகளின் உறுப்புகளை ஹாங்காங்குக்கு கடத்த முயற்சி

நைஜீரியாவில் நடந்த ருசிகர சம்பவம் :கழுதைகளின் உறுப்புகளை ஹாங்காங் க்கு கடித்த முயற்சி தடுத்து நிறுத்தி கைப்பற்றிய சுங்க அதிகாரிகள்

Update: 2022-09-09 08:30 GMT

நைஜீரிய நாட்டில் உள்ள லாகோஸ் விமான நிலையத்தில் சுகத்துறை அதிகாரிகள் சம்பவத்தன்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் .அவர்கள் விலங்குகள் ஏற்றுமதி பிரிவைவைக் கடந்து செல்ல முயற்சித்த போது அங்கிருந்து வந்த துர்நாற்றம் அவர்களை தொடர்ந்து செல்வதை தடுத்தது.


அப்போது அந்த பிரிவினுள் அவர்கள் சென்றபோது ஹாங்காங்குக்கு கொண்டு செல்லப்படுவதற்காக 16 சாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதும் அதில் இருந்துதான் துர்நாற்றம் வருகிறது என்றும் கண்டறிந்தனர். அந்த சாக்கு முட்டையில் அப்படி என்னதான் இருக்கிறது என்று அவர்கள் அவிழ்த்து பார்த்த போது அவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அந்த சாக்கு மூட்டைகளில் கழுதைகளின் ஆணுறுப்புகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.  7000 கழுதைகளளின் ஆணுறுப்புகள் 16 சாக்கு முட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டு அவற்றை கைப்பற்றி சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர் .


இது குறித்து மோப்பம் பிடித்துவிட்ட கடத்தல்காரர் அங்கிருந்து தப்பிவிட்டார். கடத்தவிருந்த கழுதை ஆணுறுப்புகளின் மதிப்பு 4,78,000 டாலர். கழுதைகளின் உடல் உறுப்புகளைக் கொண்டு சீன நாட்டில் பாரம்பரிய மருந்துகள் தயாரிக்கிறார்கள் என்பதும் நைஜீரியா நாட்டில் கழுதை உடல் உறுப்புகள் ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது என்பதும் கூடுதல் தகவல்களாகும்.





 


Similar News