அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு சடங்கு தொடக்கம்!

அயோதியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் குடமுழுக்கு தொடர்பான சடங்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2023-11-06 07:30 GMT

அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. இதை அடுத்து அங்கு ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி பூமி பூஜை செய்தார். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி ராமர் கோவில் கட்டுமான பணிகளை ராமஜென்ம பூமி அறக்கட்டளை மேற்பார்வையிட்டு வருகிறது. கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன.


அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் குடமுழுக்கு நடைபெறுகிறது. அப்போது ராமர் சிலை கருவறைக்குள் நிறுவப்படுகிறது. பக்தர்கள் வழிபாட்டுக்கு கோவில் திறந்து விடப்படுகிறது. பிரதமர் மோடி ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்று இருக்கிறார். அவருக்கு சமீபத்தில் விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில் ராமர் கோவில் குடமுழுக்கு தொடர்பான சடங்குகள் நேற்று தொடங்கின.


கோவிலில் உள்ள ராமர் தர்பார் பகுதியில் அக்ஷத் பூஜை என்ற சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. 100 குவிண்டால் முழு தானிய அரிசியை மஞ்சள் உடன் கலந்து வழிபாடு நடத்தப்பட்டது. வழிபாடு நடத்தப்பட்ட இந்த அரிசி பூஜையில் பங்கேற்ற 90 விசுவ இந்து பரிசத் நிர்வாகிகளுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் குடமுழுக்கு நடைபெறுவதற்குள் நாடு முழுவதும் அரிசியை விநியோகிப்பார்கள் என்று ராமஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்தது.


SOURCE :DAILY THANTHI

Similar News