ஒரு லிட்டருக்கும் குறைவான தண்ணீர் பாட்டில்களுக்கு தடை : அரசு முடிவு
அசாம் அரசு ஒரு லிட்டருக்கும் குறைவான தண்ணீர் பாட்டில்களுக்கு தடை விதித்துள்ளது.
ஒரு லிட்டருக்கும் குறைவான தண்ணீர் பாட்டில்கள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கு அக்டோபர் இரண்டாம் தேதி முதல் தடை விதிப்பதாக அசாம் அரசு முடிவு செய்துள்ளது.அசாம் அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறிய தகவல்கள்.
"அசாம் முழுவதும் ஒரு லிட்டருக்கு குறைவான தண்ணீர் பாட்டில்கள் உற்பத்தி செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் இரண்டாம் தேதி முதல் இந்த தடை உத்தரவு அமலுக்கு வரும். 2024 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் இரண்டு லிட்டர் குறைவான தண்ணீர் பாட்டில்களுக்கு தடை செய்யப்படும் என்றார்".
SOURCE:DAILY THANTHI