பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழா - பிரதமர் மோடியின் சகோதரர் பங்கேற்பு

பங்காரு அடிகளார் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது .பிரதமர் மோடியின் சகோதரர் பங்கஜ் தாஸ் மோடி பங்கேற்றார்.

Update: 2023-03-03 06:30 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் 83வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணியளவில் ஆதிபராசக்தி அம்மனுக்கு மங்கல இசை உடன் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு பங்காரு அடிகளாரை தங்கரதத்தில் விழுப்புரம் கடலூர் மாவட்ட செவ்வாடை பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.


மோடியின் சகோதரர் பங்கஜ் தாமோதர் தாஸ் மோடி பங்கேற்று பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார். நேற்று மாலை 5 மணி அளவில் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க அறிந்தால் பங்காரு அடிகளாரின் பிறந்தநாள் விழாவை ஒட்டி 3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமை தாங்கினார். ஆன்மீக இயக்க தலைமை செயல் அதிகாரியாக தீரன் ஆதிபராசக்தி ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத் துணைத் தலைவர் ஸ்ரீ தேவி அனைவரையும் வரவேற்று பேசினார். இதனை தொடர்ந்து விழா மலர் வெளியிடப்பட்டது.


சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை ஹைகோர்ட் நீதிபதி ஆர்.எம்.டி தீக்காராமன், வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன் மேலாளர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராப்ட் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் விழா பேருரை ஆற்றினார் . பங்காரு அடிகளார் ரூபாய் 3 கோடி மதிப்பிலான இருசக்கர வாகனம், சைக்கிள் ,கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் சைக்கிள் உள்ளிட்ட 115 விதமான நலத்திட்ட உதவி பொருட்களை 3100 ஏழை எளியவர்களுக்கு வழங்கினார்.



 


Similar News