ஹிஜாப் அணியாத பெண்ணுக்கு வங்கிச் சேவை: மேனேஜர் பதவி நீக்கம்!

Update: 2022-11-29 09:02 GMT

ஈரானில் ஹிஜாப் அணியாத பெண் ஒருவருக்கு வங்கி சேவை வழங்கிய மேனேஜர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிகழ்வு ஈரான் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.

ஈரானை பொறுத்தவரை அங்கு பெரும்பாலான வங்கிகள் அரசின் கட்டுப்பாட்டின் கீழ்தான் உள்ளன. இதனால் அங்கு ஹிஜாப் விதிமுறைகளை பின்பற்றுவது முக்கியமாகிறது என்று ஈரான் அரசு விளக்கமளித்துள்ளது.

ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க காஸ்த் எர்ஷாத் என்ற சிறப்புப் பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர்.

மாஷா அமினி என்ற இளம்பெண் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர். போலீஸ் காவலில் அடித்து கொன்றனர். 

அப்போது இருந்து ஹிஜாப் அணிவதற்கு எதிராக ஈரான் நாட்டு பெண்கள் போராடி வருகின்றனர். 

Input From: NDTV


Similar News