வங்கிகள் இணைப்பால் வங்கி ஊழியர்கள் வேலை இழக்க மாட்டார்கள்! மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் பதில்!

வங்கிகள் இணைப்பால் வங்கி ஊழியர்கள் வேலை இழக்க மாட்டார்கள்! மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் பதில்!

Update: 2019-12-06 01:53 GMT

கடந்த ஆகஸ்ட் மாதம் 10 பொதுத் துறை வங்கிகள் நான்கு பெரிய வங்கிகளாக ஒன்றிணைக்கப்படுவது
குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.


வங்கிகள் இணைப்பு
நடவடிக்கையால் வங்கிகளின் கடன் வழங் கும் அளவு அதிகரித்துள்ளது என்றும் ஊழியர்கள்
எவரும் வேலை இழக்கவில்லை என்றும் வங்கிகள் இணைப்பு நடவடிக்கையின்போது ஊழியர்களின்
நலனும் கருத்தில் கொள்ளப்பட்டதாகவும் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக்
தாகுர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் மாநிலங்களவையில் கூறினார். 


மேலும் வங்கிகள்
இணைப்பு நடவடிக்கையை தொடங்கும் முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிலவற்றை
மேற்கொண்டதாகவும், குறிப்பாக 1998-ல் வெளியிட்ட
நரசிம்மம் குழுவின் பரிந்துரையு மற்றும் 2008-ம் ஆண்டு வெளியான
லீலாதர் குழுவின் பரிந்துரை ஆகியவை இணைப்பு நடவடிக்கை யின்போது மிகச்சரியாக
பின்பற்றப்பட்டதாக அமைச்சர் கூறினார்.


இணைப்பு நடவடிக்கைகள்
எடுக்கும்போது வங்கிகளின் தகவல் தொழில்நுட்ப அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும்
மனித சக்தியை மேலும் சிறப்பாக பயன்படுத்துவது குறித்து நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக தாகுர் கூறினார்.


Similar News