இந்துக்களின் நம்பிக்கை விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது! சூரிய கிரகணத்தின்போது உலக்கை நின்ற அதிசயம்! வைரல் ஆனது வீடியோ!

இந்துக்களின் நம்பிக்கை விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது! சூரிய கிரகணத்தின்போது உலக்கை நின்ற அதிசயம்! வைரல் ஆனது வீடியோ!

Update: 2019-12-27 07:12 GMT

சூரிய கிரகணம் நேற்று, இந்தியா உள்பட பல நாடுகளில் தெரிந்தது. தமிழகத்தில் சென்னை, ஊட்டி திருச்சி திண்டுக்கல், கரூர், சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, மதுரை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூரியகிரகணம் நன்றாக தெரிந்தது.


சூரிய கிரகணத்தை மாணவ மாணவிகளும் பொதுமக்களும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.


சூரிய கிரகணம் நடப்பதை விஞ்ஞான ரீதியாக எப்படி என்று கணிக்க முடிகிறதோ, அது போலவே இந்துக்களின் வான சாஸ்திரத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சூரியனும் சூரிய கிரகணம் உள்பட அனைத்து நிகழ்வுகளையும் துல்லியமாக அவ்வப்போது கணித்து வெளியிட்டு வருகிறது. அதன்படி சூரிய கிரகணம், சந்திர கிரகணம் உட்பட அனைத்தும் துல்லியமாக கணிக்கப்படுகின்றன. இதுபோன்ற நாட்களில் எந்தெந்த ராசியினருக்கு சாதகமாக இருக்கும், எந்தெந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டும் போன்றவற்றை, ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன.





இது ஒருபுறமிருக்க பழங்காலத்திலிருந்தே இந்துக்களிடம் சூரிய கிரகண காலத்தை துல்லியமாக கணிப்பதற்கு உலக்கையை பயன்படுத்தி வந்துள்ளனர்.


நேற்று நடந்த சூரிய கிரகணத்தின் போதும் சூரிய கிரகணம் தொடங்குவதற்கு சற்று முன்பு உலக்கையை நின்ற நிலையில் வைத்து பிடித்துள்ளனர். சூரிய கிரகணம் தொடங்கியவுடன் அந்த உலக்கை தானாகவே நின்றுள்ளது. சூரிய கிரகணம் முடிந்த உடன் அது கீழே சாய்ந்து உள்ளது.





இந்த உலகை அதிசயம் தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் நடந்துள்ளது. திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல கிராமங்களில் உள்ள இந்து பெரியவர்கள், உலக்கையை நிறுத்தி இந்துக்களின் நம்பிக்கையை நிரூபித்து உள்ளனர்.


இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது விஞ்ஞான ரீதியிலானதா? அல்லது ஆன்மீக ரீதியிலானதா? என்பது தெரியாது. ஆனால் இந்துக்களின் நம்பிக்கை விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.


Similar News