ராமர் கோவில் பூமி பூஜையின் மிகச் சிறந்த 5 புகைப்படங்கள்!

ராமர் கோவில் பூமி பூஜையின் மிகச் சிறந்த 5 புகைப்படங்கள்!

Update: 2020-08-07 03:22 GMT

பகவான் இராமர் ஜென்மபூமி பூஜை நடைபெற்ற நாள் ஆகஸ்ட் 5 2020. இந்துக்களின் வரலாற்றில் ஐந்து நூற்றாண்டுகள் கடந்து , பல மில்லியன் கணக்கான இந்து மக்களின் 492 ஆண்டுகளுக்கு பிறகு விடியலை நோக்கிய போராட்டத்தில் வெற்றியின் உச்சமாக இந்நாள் பார்க்கப்படுகிறது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முன்னிலையில் பகவான் ராம ஜென்ம பூமியான அயோத்தியில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இந்த வரலாற்று சிறப்புமிக்க விழாவில் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், R.S.S தலைவர் மோகன் பகவத், உத்திரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட முக்கிய படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

முதல் புகைப்படம்: பிரதமர் மோடி அவர்கள் தனது இந்திய விமானப்படை ஜெட் விமானத்தில் டெல்லியிலிருந்து அயோத்தி பயணத்திற்காக லக்னோ சென்றர் பின்னர் , ஹெலிகாப்டரில் அயோத்திக்கு செல்கிறார்.


இரண்டாவதாக உள்ள புகைப்படம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பகவான் இராமர் பூமி பூஜைக்கு செல்வதற்கு முன்பு , இராமரின் ஜென்மபூமி வளாகத்தில் உள்ள இறைவன் ராம் லல்லா விராஜ்மானின் தரிசனம் பெற்றார்

மூன்றாவதாக உள்ள புகைப்படம் பூமி பூஜையில் எடுக்கப்பட்ட ஒரு படம் ஆகும். அதில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பூஜையின் முடிவில் ஒரு புராணத்தை வழங்குவதை பார்க்க முடிகிறது.



 


நான்காவதாக உள்ள புகைப்படம் ஒரு விளம்பரப் பலகையில் உள்ள படம். இதில் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்த இந்துக்கள் பகவான் ராமரின் ஜன்மபூமி பூஜை மற்றும் பகவான் ராமரின் புகைப்படங்களை ஒலிபரப்ப செய்தனர்.

ஐந்தாவதாக உள்ள புகைப்படம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ராமர் கோவில் முன்பு சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து கும்பிட்டு இறைவனை தரிசனம் செய்தபோது எடுத்த இறுதி புகைப்படம் மேலும் இது சிறந்த படமாக உள்ளது.



Similar News