பி.எஃப்.ஐ நிர்வாகி சொத்து முடக்கம்!

கொலை வழக்கில் கைதான பி.எஃப்.ஐ நிர்வாகியின் சொத்தை என்.ஐ.ஏ அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

Update: 2024-06-08 14:52 GMT

கோவை ஹிந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் கைதான பி.எஃப்.ஐ நிர்வாகியின் சொத்துக்களை என்.ஐ. ஏ அதிகாரிகள் முடக்கியுள்ளனர். கோவையைச் சேர்ந்த ஹிந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிக்குமார் துடியலூர் காவல் நிலைய எல்லையில் 2016 செப்டம்பர் 22-ல் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக என்.ஐ.ஏ என்ற தேசியப் புலனாய்வு நிறுவன அதிகாரிகள் விசாரித்து கோவையைச் சேர்ந்த சதாம் உசேன் முபாரக் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர். அவர்கள் பி.எஃப்.ஐ எனும் 'பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் மீது என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர் .

அவர்களில் சுபேதர் என்பவர் 2012- இல் வாங்கிய சொத்து ஒன்றை 2020-ல் அவரது தாய்க்கு செட்டில்மெண்ட் செய்து கொடுத்துள்ளார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின் இந்த சொத்து மாற்றம் நடந்துள்ளதால் அதைப் பறிமுதல் செய்ய சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் உத்தரவு பெற்றனர். அதன் அடிப்படையில் கோவையில் உள்ள சுபேதரின் அசையா சொத்தை முடக்கியுள்ளனர். இதன் மதிப்பை வெளியிட என்.ஐ.ஏ அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.


SOURCE :Newspaper 

Tags:    

Similar News