சென்னை- நெல்லை இடையேயும் வந்தாச்சு வந்தே பாரத்! ஆகஸ்ட் இறுதியில் இயக்க முடிவு

சென்னை நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் அடுத்த மதம் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2023-07-27 07:00 GMT

இந்தியாவில் வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2019 - ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. குளிர்சாதன வசதி அதிவிரைவு பயணம் உள்ளிட்ட அம்சங்களால் இந்த ரயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.  இதனால் நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன .


இதுவரை பல்வேறு வழித்தடங்களில் 23 ரயில் சேவைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அதில் சென்னையில் இருந்து சென்னை-  கோவை, சென்னை- மைசூர் இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் சென்னை நெல்லை இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது .இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வந்தது. அதன்படி அடுத்த மாதம் இறுதிக்குள் சென்னை நெல்லை இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க முடிவு செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-


சென்னை நெல்லை இடையே ஆன வந்தே பாரத் ரயில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இயக்க திட்டமிடப்பட்டது. ஆனால் முன்கூட்டியே தண்டவாளம் மேம்பாட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் முதற்கட்டமாக எட்டு பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. பயணிகளின் வரவேற்பு பொறுத்து கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும். வழக்கமாக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை வந்தடைய 10 மணி நேரம் ஆகும். வந்தே பாரத் 8 மணி நேரத்திற்குள் வந்தடையும். வகையில் இயக்கப்பட உள்ளது. இதனால் 2 மணி நேரம் மிச்சமாகும்.


இதே போல படுக்க வசதியுடன் கூடிய வந்தேபாரதத் ரயில் தயாரிக்கும் பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை படுக்கை வசதிகள் உடைய பெட்டிகள் அமல்படுத்தப்பட மாட்டாது. எனவே சென்னை- நெல்லை வழித்தடத்தில் எட்டு பெட்டிகளிலும் இருக்கைகள் உட்கார்ந்து செல்லும் வகிலேயே அமைக்கப்பட உள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய நான்கு ரயில் நிலையங்களிலும் நின்று செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.


SOURCE :DAILY THANTHI

Similar News