திருவள்ளூரில் உள்ள பழமையான ராகவேந்திரர் கோவிலில் பெரிய கொள்ளை - அரிய, விலை உயர்ந்த பொருள்களை திருடிச்சென்ற மர்மநபர்கள்
திருவள்ளூரில் உள்ள பழமையான ராகவேந்திரர் கோவிலின் பூட்டை உடைத்து பஞ்சலோக சிலைகள், வெள்ளி நகை, ரொக்கம் ஆகிய பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
திருவள்ளூரில் உள்ள பழமையான ராகவேந்திரர் கோவிலின் பூட்டை உடைத்து பஞ்சலோக சிலைகள், வெள்ளி நகை, ரொக்கம் ஆகிய பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
திருவள்ளூர் நகரின் மையப்பகுதியான வீரராகவர் கோவில் குளம் அருகே தெற்கு குளக்கரையில் அமைந்துள்ளது ராகவேந்திர கோவில் உள்ளது. இந்த பழமையான கோவில் கடந்த 2001 இல் புதுப்பிக்கப்பட்டது, இந்த கோவிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் வியாழக்கிழமை ராகவேந்திரனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து இரவில் வழக்கம் போல் அர்ச்சகர் ராகவேந்திரர் கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் அர்ச்சகர் ராகவேந்திரன் வெள்ளிக்கிழமை காலையில் கோவிலுக்குள் வந்த பொழுது கதவு பூட்டு உடைக்கப்பட்டுள்ளது பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இந்த கொள்ளையில் பஞ்சலோக சிலை, வெள்ளி பூமுக தட்டு, கலச சொம்பு, பஞ்ச பாத்திரம், வெள்ளி ஆரத்தி தட்டு, ஐந்து கிலோ எடை கொண்ட பஞ்சலோக சிலை, 63 கிராம் நகை மற்றும் ரொக்கம் ₹30,000 ஆகியவற்றார்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் பிறகு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.