மோடி அமித்ஷா முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்த திரௌபதி முர்மு

குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக பா.ஜ.க'வின் வேட்பாளர் திரௌபதி முர்மு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் வேட்புமனு செய்தார்.

Update: 2022-06-24 10:41 GMT

குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக பா.ஜ.க'வின் வேட்பாளர் திரௌபதி முர்மு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் வேட்புமனு செய்தார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைவதை முன்னிட்டு, புதிய குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பா.ஜ.க சார்பில் ஒடிசாவை சேர்ந்த பழங்குடியினத்தை சார்ந்த திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பா.ஜ.க'வின் முக்கிய தலைவர்கள் உடன் இருந்தனர்.

Similar News