ஆருத்ரா நிறுவனத்தோடு தொடர்புபடுத்தி அவதூறு - அதிரடியாக போலீசுக்கு சென்ற புகார்!
ஆருத்ரா நிறுவனத்தோடு தொடர்புபடுத்தி அவதூறு பரப்புவதாக கமிஷனர் அலுவலகத்தில் பா.ஜ.க நிர்வாகி புகார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பா.ஜ.க மாநில துணைத்தலைவர் வக்கீல் ஆர்.சி.பால் கனகராஜ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் சென்னை ஐகோர்ட் வக்கீல் சங்க தலைவராக நான்கு முறை தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக பணியாற்றி இருக்கிறேன் . இந்த நிலையில் வாட்ஸ்ஆப் போன்ற சமூக ஊடகங்களில் ஆருத்ரா நிறுவனத்தோடு தொடர்பு படுத்தி என்மீது அவதூறு தகவல்களை பரப்புகிறார்கள். எனது நண்பர்கள் இது பற்றி என்னிடம் கேட்கின்றனர் .
ஆருத்ரா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிஷ் என்பவரோடு தொடர்பு படுத்தி அந்த அவதூறு தகவல் உள்ளது . ஹரிஷ் என்பவர் யார் என்று எனக்கு தெரியாது. ஆருத்ரா நிறுவனத்தை பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது. தவறான அவதூறான தகவல் பரப்பியவர்கள் யார் என்று கண்டுபிடித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.