கர்நாடகா இடைத்தேர்தலில் பா.ஜ.க 12 தொகுதிகளில் முன்னிலை! எடியூராப்பா அரசுக்கு ஆபத்து நீங்கியது!

கர்நாடகா இடைத்தேர்தலில் பா.ஜ.க 12 தொகுதிகளில் முன்னிலை! எடியூராப்பா அரசுக்கு ஆபத்து நீங்கியது!

Update: 2019-12-09 06:00 GMT

கர்நாடகா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதலமைச்சராக எடியூராப்பா உள்ளார்.


அம்மாநிலத்தில் கடந்த 5-ஆம் தேதி 15 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.  இதில் பாஜக, காங்கிரஸ், மஜத கட்சிகள் போட்டியிட்டுள்ளது.


இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. மொத்தமுள்ள15 தொகுதிகளில், 12 தொகுதிகளில் பா.ஜ.க, முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், ம.ஜ.த. ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகின்றன.


கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மைக்கு 112 இடங்கள் தேவைப்படும் நிலையில், பா.ஜ.கவுக்கு தற்போது 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.


எனவே அறுதி பெரும்பான்மைக்கு 6 இடங்களில் வெற்றி பெறவேண்டி நிலையில், 12 இடங்களில் பா.ஜ.க, முன்னிலை பெற்று வருகிறது. எனவே எடியூரப்பா அரசுக்கான ஆபத்து நீங்கியுள்ளது.


Similar News