அரசியல் சாசனத்தை பா.ஜ.க மதிக்கிறது - பிரதமர் மோடி!
அரசியல் சாசனத்தை பாஜக அரசு மதிக்கிறது. சட்டமேதை அம்பேத்கர் இப்போது வந்தால் கூட அதை ரத்து செய்ய முடியாது என்ற பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார் .
அரசமைப்புச் சட்டத்தை அழிக்க பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் அரசியல் சாசனத்தை பாஜக மதிப்பதாகவும் சட்டமேதை அம்பேத்கர் வந்தால் கூட அதை ரத்து செய்ய முடியாது என்றும் கருத்தை பிரதமர் தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது :-
அரசமைப்புச் சட்டத்தை பாஜக அழிக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டபோது அரசியல் சாசனத்தை அழிக்க காங்கிரஸ்தான் முயற்சித்தது. ஆனால் தற்போது அரசியல் சாசனத்தின் பெயரில் மோடி மீது குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறது. அரசியல் சாசனத்தை பாஜக அரசு மதிக்கிறது. சட்டமேதை அம்பேத்கர் இப்போது வந்தால் கூட அதை ரத்து செய்ய முடியாது.
நாட்டை பலவீனப்படுத்த விரும்புவதா? என்ன மாதிரியான கூட்டணி இது. எப்போதும் தேசவிரோத சக்திகளுடன் தான் காங்கிரஸ் துணை நிற்கிறது. பல ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் எந்த ஒரு பெரிய பிரச்சனைக்கும் முழுமையான தீர்வை கண்டதில்லை. வளர்ச்சிக்கு எதிரான எண்ணத்தையே காங்கிரஸ் கொண்டுள்ளது. நாட்டின் எல்லை மாவட்டங்களில் முந்தைய காங்கிரஸ் அரசுகள் வேண்டுமென்றே வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ளாமல் புறக்கணித்தனர். தற்போது இந்தியாவை சக்தி வாய்ந்த நாடாக பாஜக அரசு உருவாக்கி வரும் நிலையில் நாட்டை பலவீனப்படுத்த இந்தியா கூட்டணி முயற்சிக்கிறது என்றார்.
SOURCE :Dinaboomi