பகுஜன்சமாஜ் கோட்டை ஹமீர்பூர் தொகுதியை கைப்பற்றியது பாஜக !! வயிற்றெரிச்சலில் மாயாவதி கண்டபடி பேச்சு!!

பகுஜன்சமாஜ் கோட்டை ஹமீர்பூர் தொகுதியை கைப்பற்றியது பாஜக !! வயிற்றெரிச்சலில் மாயாவதி கண்டபடி பேச்சு!!

Update: 2019-09-28 12:36 GMT


உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் சட்டசபை தொகுதிக்கு சென்ற 23 ந்தேதி இடைத் தேர்தல் தேர்தல் நடந்தது.


இந்த தேர்தலில் பாஜக, சமாஜ்வாடி கட்சி ,பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மும்முனை போட்டியால் கடந்த 1 மாதமாக இந்த தொகுதி அல்லோலப்பட்டது. இந்த தொகுதியில் இதர பிற்பட்டவர்கள் கணிசமாக இருந்தாலும் முஸ்லிம்களும், தலித்துகளும் பெரும்பான்மையாக உள்ளனர்.


என்றாலும் சென்ற சட்டசபை தேர்தலில் உத்தரபிரதேசத்தில் ஆதி யோகி அலையில் பாஜக பெரும்பான்மையாக தொகுதிகளை கைப்பற்றியது. அந்த அலையில் இந்த தொகுதியில் தலித்துகள், முஸ்லிம்களின் வாக்குகளைக் கூட பெற்று பாஜக வெற்றி பெற்றது. தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் மாயாவதி தனது கட்சி வேட்பாளராக நசாத் அலி என்பவரை வேட்பாளராக அறிவித்து கடுமையாக பிரச்சாரம் செய்தார்.


தலித்துகள் வாக்குகளும், முஸ்லிம் வாக்குகளும் மாயாவதிக்குதான் கிடைக்கும் என்றும் அதனால் பகுஜன்சமாஜ் கட்சிதான் வெற்றி பெரும் எனவும் பரவலாக பேசப்பட்டது. ஆனால் இன்று முடிவுகள் வெளி வந்ததில் பாஜக வேட்பாளர் யுவராஜ் சிங் 74,374 வாக்குகள் பெற்று 17,846 வாக்குகள் வித்தியாசத்தில் தனக்கு அடுத்த நிலையில் இருந்த சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் மனோஜ் பிரஜாபதியை தோற்கடித்தார்.  


பகுஜன் சமாஜ் கட்சியின் நாசாத் அலி 28,790 வாக்குகளையும் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


தான் நிறுத்திய வேட்பாளர் 3 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டு, படு தோல்வி அடைந்ததால் ஆத்திரம் அடைந்த மாயாவதி பாஜக குறித்து கண்டபடி பேசியதுமல்லாமல் வாக்களிக்கும் எந்திரங்களில் பாஜக தில்லுமுல்லு செய்ததாகவும், அதுதான் தோல்விக்கு காரணம் என்றும் கூறினார். மேலும் வாக்குப்பதிவு நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்ததால் தங்கள் கட்சிக்கு வாக்களிக்கும் வாக்காளர்கள் சாவடிகளுக்கு செல்லவில்லை என்றும் ..
இதை பயன்படுத்தி சதி செய்து பாஜக வெற்றி பெற்றதாகவும் ஆத்திரத்துடன் கூறினார். மேலும் காங்கிரஸ்காரர்கள் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் அவர்கள் ஜாதி உணர்வுடன் நடந்து கொண்டார்கள் என்றும், அதனால் தான் தனது கட்சி 3 வது இடத்துக்கு தள்ளப்பட்டு படு தோல்வி அடைந்ததாகவும், இனி வரும் தேர்தல்களில் பாஜகவை ஒரு கை பார்த்துவிடுவேன் என்றும் உரக்க கூறினார்.


சென்ற தேர்தலில் பாஜக சார்பில் வெற்றி பெற்ற எம்எல்ஏ அஷோக்குமார் கொலை வழக்கு ஒன்றில் பதவியை இழந்ததால் அங்கு இடைத்தேதல் நடை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 


Similar News