ஊழலற்ற நாட்டை உருவாக்குவதே பாஜகவின் இலக்கு: ஊழல் பணம் மக்களுக்கே திரும்ப கிடைக்கும்- பிரதமர் மோடி!
ஊழலற்ற நாட்டை உருவாக்குவதே பாஜகவின் இலக்கு என்றும் ஊழல்வாதிகளால் கொள்ளையடிக்கப்பட்ட மக்களின் பணம் திரும்ப மக்களுக்கே கிடைக்கும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஊழலற்ற நாட்டை உருவாக்குவதே பாஜக கூட்டணியின் இலக்கு. ஏழை மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் அவர்களுக்கு திரும்ப கிடைப்பதை உறுதி செய்ய பணியாற்றி வருகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் மக்களவை தொகுதி பாஜக பெண் வேட்பாளரான முன்னாள் அரச குடும்பத்தைச் சேர்ந்த அம்ருதா ராயுடன் தொலைபேசி உரையாடிய போது இக்கருத்துக்களை பிரதமர் மோடி கூறினார்.
கிருஷ்ணா நகரில் காங்கிரஸ் சார்பில் மஹூவா மொய்த்ரா போட்டியிடும் நிலையில் பாஜக சார்பில் அமிரருதா ராய் களத்தில் உள்ளார். இவர் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த அரசர் கிருஷ்ணச்சந்திரன் ராய் வம்சத்தை சேர்த்தவர் .இந்நிலையில் அம்ருதா ராயுடன் புதன்கிழமை தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி அவருக்கு உத்வேகமூட்டினார். இந்த உரையாடலில் பிரதமர் பேசிய பேசியதாக கட்சி தலைப்பில் கூறப்பட்டதாவது :-
"ஏழை மகளிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் அவர்களுக்கு திரும்ப கிடைப்பது உறுதி செய்ய பணியாற்றி வருகிறேன். ஊழல்வாதிகளிடமிருந்து அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்படும் பணம் சொத்துகளின் வாயிலாக இதை உறுதி செய்வதற்கான சட்ட வாய்ப்புகள் ஆராயப்பட்டு வருகின்றன. மேற்கு வங்கத்தில் அரசு பணிக்காக மக்களிடமிருந்து ரூபாய் 3000 கோடி வரை லஞ்சமாக பெறப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட இந்த பணம் மீண்டும் ஏழைகளுக்கு கிடைக்கும். எனது நிலைப்பாட்டை நீங்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். நேற்று வரை ஆம் ஆத்மி மீது ஊழல் புகார்களை சுமத்தி வந்த காங்கிரஸ் இப்போது கட்சியை ஆதரிக்கிறது. இது தேசத்தை விட ஆட்சி அதிகாரமே முதன்மையானது என்று எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டை அம்பலமாகியுள்ளது. ஒருபுறம் ஊழலற்ற நாட்டை உருவாக்க பாஜக கூட்டணி, மற்றொருபுற ஊழல்வாதிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒரணியில் திரண்டுள்ளனர் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இந்த உரையாடலின் போது தனது குடும்பத்தை துரோகிகள் என எதிர் கட்சிகள் விமர்சிப்பது குறித்து பிரதமரிடம் அம்ருரதா ராய் கூறினார். எதிர்க்கட்சிகளின் எத்தகைய விமர்சனத்தையும் பொருள்படுத்த வேண்டாம். அவர்கள் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகின்றனர் .எனவே அடிப்படை அற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் "என்று குறிப்பிட்ட பிரதமர் அரசர் கிருஷ்ணச்சந்திர ராயின் சமூக சீர்திருத்தங்கள் மற்றும் வளர்ச்சி பணிகளை பாராட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசி அம்ருதா ராய் "பிரதமரின் வார்த்தைகள் எனக்கு புதிய ஊக்கத்தையும் உத்வேகத்தையும் தந்துள்ளது கிருஷ்ணா நகரில் பாஜகவின் வெற்றிக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" என்றார்.
SOURCE :Dinamani