திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவ கோலாகலம் - தயாரான தர்ப்பை பாய், கயிறு, ஏன் தெரியுமா?

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 27ஆம் தேதி பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற உள்ளது.

Update: 2022-09-24 09:03 GMT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 27ஆம் தேதி பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு தேவையான தர்பை பாய், தர்பை கயிறு ஆகியவை கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டன. இக்கோவிலின் பிரம்மோற்சவம் வருகிற 27ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கி ஒன்பது நாட்கள் நடைபெற உள்ளது.

பிரம்மோற்சவத்தின் துவக்க நாளன்று கொடியேற்றம் நடைபெறுவதற்கு முன்னதாக கோவில் தங்க கொடிமரத்தில் தர்ப்பையால் தயார் செய்யப்பட்ட பாய் சுற்றி வைக்கப்படும், அதன் பின்னர் தர்ப்பையால் தயார் செய்யப்பட்ட கயிறு மூலம் கருடன் படம் வரையப்பட்ட கொடி ஏற்றி வைக்கப்படும். இதற்காக 22 அடி அகலம் உள்ள ஏழு அடி உயரமும் கொண்ட தர்ப்பை 200 அடி நீளம் உள்ள தர்பையால் தயார் செய்யப்பட்ட கயிறு ஆகியவை பயன்படுத்தப்படும்.



Similar News