ஆப்பிள் நிறுவனத்தின் வியாபார தந்திரத்திற்கு மணி கட்டிய பிரேசில் நீதிமன்றம் - சார்ஜர் இல்லாத காரணத்தினால் 165 கோடி அபராதம் விதித்து அதிரடி உத்தரவு
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வாங்கினால் அதனுடன் சார்ஜர் வழங்காத விவகாரத்தில் குறித்து தற்பொழுது ஆப்பிள் நிறுவனத்திற்கு பிரேசில் நீதிமன்றம் 165 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வாங்கினால் அதனுடன் சார்ஜர் வழங்காத விவகாரத்தில் குறித்து தற்பொழுது ஆப்பிள் நிறுவனத்திற்கு பிரேசில் நீதிமன்றம் 165 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
பிரேசிலில் சார்ஜர் இல்லாத ஐபோன்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் ஐபோன் 13 ரக செல்போன்களை சார்ஜர் இல்லாமல் ஆப்பிள் நிறுவனம் விற்றதாக சாபோலோ நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
மேலும் வாடிக்கையாளர்கள் கூடுதல் தயாரிப்புகளை வாங்க கட்டாயப்படுத்துவது தவறான நடைமுறை என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரேசில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐ போன் 12 அல்லது 13 ரக மாடல் ஃபோன்களை வாங்கியவர்களுக்கு சார்ஜர் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.