#BREAKING: தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.!

#BREAKING: தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.!

Update: 2020-07-30 07:18 GMT

தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

ஆகஸ்ட் மாதத்தில் இருக்கும் அனைத்து நாட்டு ஞாயிற்றுக் கிழமையும் தளர்வு இல்லாத ஊரடங்கு.

இ - பாஸ் நடைமுறையில் மாற்றம் கிடையாது. ஒரு மாவட்டம் விட்டு மற்ற மாவட்டம் செல்வதற்கும் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்வதற்கும் இ -பாஸ் கட்டாயம். 

காய்கறிக்கடை, மளிகைக்கடைகளுக்கு காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்குவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு மாலை 6 மணி வரை இருந்த காய்கறிக்கடை, மளிகைக்கடைகளுக்கு தற்போது மேலும், ஒரு மணிநேரம் அதிகரிப்பு.  

பிற கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை  அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஆகஸ்ட் 15ஆம் தேதி மத்திய அரசு வழிகாட்டுதல்படி சுதந்திர தினம் கொண்டாடப்படும். மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடித்து ஒத்துழைக்க வேண்டும். 

Similar News