குப்பை வண்டியில் சிலுவை லோகோ-பாஜாகாவின் எதிர்ப்பால் மாற்றம்?
கதிர் செய்திகள் மற்றும் கம்யூன் செய்திகள் இதுதொடர்பான செய்தியை வெளியிட்ட உடன் இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பேசுபொருளாக மாறியது.
சென்னை மாநகராட்சி குப்பை வண்டியில் மாநகராட்சி லோகோவாக சிலுவை வரையப்பட்டதற்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்த நிலையில் தற்போது சென்னை மாநகராட்சி அதை மாற்றி வில், மீன், புலி ஆகியவற்றை உள்ளடக்கிய லோகோவை மாற்றி வரைய உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை மாநகராட்சி குப்பை அள்ளும் வண்டியில் சிலுவை போன்ற லோகோ வரையப்பட்டு உள்ளதாகவும் தமிழக அரசு கிறிஸ்தவ மிஷனரிகளின் பிடியில் இருப்பதாகவும் சமூகவலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். கதிர் செய்திகள் மற்றும் கம்யூன் செய்திகள் இதுதொடர்பான செய்தியை வெளியிட்ட உடன் இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பேசுபொருளாக மாறியது.
இதனைத் தொடர்ந்து திமுக தமிழகத்தை கிறிஸ்தவமயமாக்க முயற்சிக்கிறது என்றும் கிறிஸ்தவ மிஷினரிகளின் பிடியில் திமுக இருப்பதாகவும் பலரும் இப்புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். இதே குறித்து ஆய்வு செய்த போது சென்னை மாநகராட்சியின் குப்பை அள்ளும் வாகனத்தில் முன்பு வரையப்பட்டிருந்த லோகோவிற்கும் தற்போது வரையப்பட்டிருக்கும் லோகோவிற்க்கும் வித்தியாசம் இருப்பதை காண முடிந்தது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி மெக்கானிக் பிரிவை தொடர்புகொண்டு விசாரித்தபோது பழைய லோகோவை மாற்றி அமைத்து வரைய முயற்சி செய்த போது சிலுவை போன்று மாறியுள்ளதாக சப்பைக் கட்டு கட்டியுள்ளது. மேலும் கடந்த முறை பராமரிப்புக்கு போய வந்த வாகனங்களில் இவ்வாறு வரையப்பட்டிருப்பது தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாகவும் விரைவில் அது மாற்றப்படும் என்று டேமேஜ் கன்ட்ரோல் முயற்சியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி வாகனங்களில் இனி மூவேந்தர்களின் சின்னங்களான மீன், புலி, வில் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய லோகோவே இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வரையப்படும் மீன், புலி, வில் ஆகியவை முறையாக வரையப்படுமா அல்லது வில் வரைய கடினமாக இருப்பதால் சிலுவையாக மாறிவிட்டது என்று மீண்டும் ஒருமுறை மாநகராட்சி பதில் அளிக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
IMAGE COURTESY : Youturn
Source : Youturn