நான்கு கோவில்களில் சுவாமி சிலைகளை அடித்து உடைத்த இஸ்லாமியர்கள்!

வாக்குவாதம் முற்றிய நிலையில் கடந்த சனிக்கிழமை அந்த பகுதியில் இருந்த நான்கு இந்துக் கோவில்களை இஸ்லாமியர்கள் தாக்கி அங்கிருந்த சிலைகளை சேதப்படுத்தியுள்ளனர்.

Update: 2021-08-10 08:32 GMT

வங்கதேசத்தில் இந்து கோவில்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில் தற்போது மேலும் நான்கு இந்துக் கோவில்கள் தாக்கப்பட்டு அங்குள்ள சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசம் குல்னா மாவட்டத்தில் ஷியாலி என்னும் பகுதியில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் கடந்த சனிக்கிழமை அந்த பகுதியில் இருந்த நான்கு இந்துக் கோவில்களை இஸ்லாமியர்கள் தாக்கி அங்கிருந்த சிலைகளை சேதப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பான செய்திகளை தாக்கா டர்பைன் என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே நடந்த இந்த மோதலின் காரணமாக அங்கே இருந்த கடைகள் மற்றும் இரு வீடுகள் சேதப்படுத்தப்பட்டதாக அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த மோதல் சம்பவத்தின் போது அந்தப் பகுதியில் இருந்த நான்கு இந்து கோவில்கள் சூறையாடப்பட்டு அங்கிருந்த 10 சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது அத்தகைய ஒரு சம்பவம் மீண்டும் நடைபெற்றுள்ளதால் அங்கு பதட்டம் அதிகரித்துள்ளது.

இந்துக் கோவில் தாக்கப்பட்டு அங்கிருக்கும் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக இதுவரை 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தாக்கா டர்பன் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் இருக்கும் இந்து கோவில்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அங்குள்ள இந்துக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தற்போது மீண்டும் கோவில்கள் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source : Dinamani 

Image courtesy : Dinamani

Tags:    

Similar News