கேரளாவில் பாஜக வெற்றி பெற்ற பஞ்சாயத்துகளில் 100% தடுப்பூசி!

Breaking News.

Update: 2021-09-01 13:31 GMT

கேரளாவில் பாஜக வெற்றி பெற்ற இரண்டு கிராம பஞ்சாயத்துகளில் இருக்கும் கிராம மக்களுக்கு 100% தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது.

கேரளாவில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால் சாதாரண மக்கள் தடுப்பூசி செலுத்த பதிவு செய்ய முடியாமல் உள்ளது என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

ஆனால் கேரளாவில் பாஜக வெற்றி பெற்ற இரண்டு கிராம பஞ்சாயத்துகள் தடுப்பூசி செலுத்துவதில் அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் முன்னுதாரணமாக இருக்கின்றன. மக்கள் அனைவருக்கும் அவர்களின் அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பாண்டநாடு மற்றும் கோடமருது பஞ்சாயத்துகளில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பாண்டநாடு கிராம பஞ்சாயத்து தலைவர் ஆஷா வி நாயர் இந்த 100% தடுப்பூசி செலுத்துவதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதேபோல் கோடமருது கிராம பஞ்சாயத்து தலைவர் பினீஷ் இல்லிக்கல் கூறுகையில், ஊராட்சியில் உள்ள இரண்டு தடுப்பூசி மையங்களில் இருந்து மொத்தம் 23,000 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது.

கேரளாவில் நாளொன்றுக்கு 25,000க்கும் மேற்பட்டோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பாஜக நிர்வகிக்கும் கிராம பஞ்சாயத்துகளில் அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் 70 சதவீதத்தினர் கேரளாவில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : Organiser

Tags:    

Similar News