பாகுபலி ஸ்டைலில் நேர்த்திக்கடன் செலுத்திய ரவி தஹியா- இணையதளத்தில் வைரல் !

ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற ரவி தஹியா தனது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக ஜலாபிஷேக சடங்கை செய்து சிவ பெருமானுக்கு நன்றி செலுத்தினார்.

Update: 2021-08-27 05:00 GMT

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரவி தஹியா சிவன் கோவிலில் தனது வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார். ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற ரவி தஹியா தனது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக ஜலாபிஷேக சடங்கை செய்து சிவ பெருமானுக்கு நன்றி செலுத்தினார்.

முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக்கில் ரவி தஹியா வெற்றி பெற்ற செய்தியை அறிந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் அணையா விளக்கை ஏற்றி வைத்து வழிபாடு செய்தனர். இந்தியா திரும்பிய பின்னர் கோவிலுக்கு சென்று தனது நேர்த்திக்கடனை ரவி தஹியா நிறைவேற்றும் காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல திரைப்படமான பாகுபலியில் நடிகர் பிரபாஸ் சிவ லிங்கத்தை தனது தோளில் வைத்த காட்சியை ஒப்பிட்டு ரவி தஹியாவை நிஜ வாழ்க்கையில் பாகுபலி என்று பதிவு செய்து வருகின்றனர். 2020ல் தீபக் புனியா மற்றும் ரவி தஹியா உத்தரகாண்டின் துங்கநாத் சிவன் கோவிலுக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. துங்கநாத் கோவில் உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள சிவன் கோவில் என்ற பெருமை பெற்ற கோவிலாகும்.

சுஷில் குமாருக்குப் பிறகு ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இரண்டாவது இந்திய மல்யுத்த வீரர் ரவி தஹியா டோக்கியோ ஒலிம்பிக்கில் 57 கிலோ ப்ரீஸ்டைல் ​​பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Source: Hindu post

Tags:    

Similar News