5000 ஆண்டு பழமையான கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் - நீதிமன்றத்தை நாடும் கோவில் நிர்வாகம்!

இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் இருக்கும் கோவில்களை அரசு சரிவர பராமரிக்காத காரணத்தினால் நிர்வாகத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோவில்களில் இருந்து இந்து அறநிலைத்துறை வெளியேற வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில் தற்போது மேலும் ஒரு கோவிலை இந்து அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் என்று அமைச்சர் தெரிவித்திருப்பது இந்துக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-08-15 06:45 GMT

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவிலை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதன் மூலம் கோவில் சொத்துக்கள் மற்றும் நகைகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.



இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் ஆணையர் குமரகுருபரன் இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று ஆய்வு செய்தனர். கோவிலை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு 5000 ஆண்டுகள் பழமையான ஆதிகேசவ பெருமாள் கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுவதாக தெரிவித்தார். இதன்மூலம் கோவில்களின் சொத்துக்கள், நகைகள் மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் அனைத்தும் உதவி ஆணையரின் நிர்வாகத்தின் கீழ் எடுத்துக் கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த கோவில் குடமுழுக்கு விழா விரைவில் நடைபெறும் என்றும் ஒரு வருடத்திற்குள் குடமுழுக்கு விழா நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு மேற்கொள்ளும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் இருக்கும் கோவில்களை அரசு சரிவர பராமரிக்காத காரணத்தினால் நிர்வாகத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோவில்களில் இருந்து இந்து அறநிலைத்துறை வெளியேற வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில் தற்போது மேலும் ஒரு கோவிலை இந்து அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் என்று அமைச்சர் தெரிவித்திருப்பது இந்துக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதம் மாறியவர்கள் மற்றும் கடவுள் மறுப்பாளர்கள் அதிகம் இருக்கும் இந்து அறநிலையத்துறையின் கீழ் கோவில்களை கொண்டு வருவதன் மூலம் கோவில்களுக்கு எந்த ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரபலமான ஆதிகேசவ பெருமாள் கோவிலை இந்து அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கோவில் நிர்வாகம் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source : Thanthi டிவி


IMAGE COURTESY : DINAMALAR

Tags:    

Similar News