விவசாயிகள் நலனுக்காக இதை மத்திய அரசு திட்டத்துடன் இணைக்க வேண்டும்-வானதி சீனிவாசன் கோரிக்கை!
Breaking News
மாநில அரசு திட்டத்தை மத்திய அரசு திட்டத்துடன் இணைத்தால் வேளாண் பொருட்களை விவசாயிகள் செல்போன் மூலம் விற்பனை செய்து அதிக வருவாய் ஈட்டலாம் என்று பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வங்கி கணக்கு மூலம் வழங்க வேண்டும் என்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது போன்ற நடவடிக்கையை மாநில அரசு கடைபிடிக்கவில்லை என்றால் அதை உடனடியாக கடைபிடிக்க வேண்டும் என்றும் இதன் மூலம் இடைத்தரகர்களிடம் விவசாயிகளை பாதுகாக்க முடியும் என்று கூறியுள்ளார்.
இவ்வாறு டிஜிட்டல் சேவை மூலம் நாம் விவசாயிகளுக்கு சேவையை வழங்கும் போது ஏதேனும் குளறுபடி ஏற்பட்டால் அதனை உடனடியாக சரி செய்ய முடியும் என்றும் முறைகேடுகளை களைய முடியும் என்றும் கூறியுள்ளார். மாநில அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் "மின்னொளி வேளாண் திட்டம்" மூலம் விவசாயிகளின் பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் அவர்களை விவசாயத்தில் தொடர்ந்து ஈடுபட செய்ய வேண்டும் என்பதற்காகவும் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் இ-நாம் திட்டம் போல் இருப்பதால் இந்தத் திட்டத்தில் அதையும் இணைத்து விவசாயிகளுக்கு உதவி செய்திட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அவ்வாறு விவசாயிகளை மின்னொளி வேளாண் திட்டம் மூலம் வருவாய் பெற வைப்பதற்கு விவசாயிகளுக்கு ஆண்ட்ராய்டு போன் கொடுத்து அவர்களின் விற்பனையை பெருக்க அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் பேசினார்.
Source : @VanathiBJP
pic.twitter.com/hNOIYLlZOT