விநாயகர் சதுர்த்திக்கு போட்டியாக ஜெபயாத்திரை- பாதிரியார் டேவிட் கைது !
இன்று காலை 5 மணிக்கு பாதிரியார் டேவிட்டை கைது செய்த காவல்துறையினர் 11 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களு போட்டியாக ஜெபயாத்திரை நடத்த வேண்டும் என்று அண்மையில் வெளியான நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அந்த நோட்டீஸ் விநியோகம் செய்த செயின்ட் பால் கல்லுாரி மற்றும் பள்ளியின் தலைவர் டேவிட் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருந்த நிலையில் கிறிஸ்தவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக நடத்திய ஜெப யாத்திரையின் விளைவால் தான் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் செயின்ட் பால் கல்லூரி மற்றும் பள்ளியின் சார்பாக நோட்டீஸ் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நோட்டீசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இதனை வெளியிட்ட டேவிட் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி சார்பாக துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 5 மணிக்கு பாதிரியார் டேவிட்டை கைது செய்த காவல்துறையினர் 11 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு கொரோனா காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் விநாயகர் சதுர்த்திக்கு போட்டியாக ஜெப யாத்திரை நடத்தப்படும் என்று பாதிரியார் டேவிட் நோட்டீஸ் விநியோகம் செய்தது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Source & Image courtesy: Patrikai