பசுக்களின் கழுத்தில் வெடிகுண்டுகளை கட்டி ஆற்றில் வீசும் கொடூரம்!! இந்திய எல்லையில் பங்களாதேஷ் மாடு கடத்தல்காரர்கள் வெறிச்செயல்!!

பசுக்களின் கழுத்தில் வெடிகுண்டுகளை கட்டி ஆற்றில் வீசும் கொடூரம்!! இந்திய எல்லையில் பங்களாதேஷ் மாடு கடத்தல்காரர்கள் வெறிச்செயல்!!

Update: 2019-07-26 11:18 GMT

மேற்கு வங்கத்தில் இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் உள்ள பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த இஸ்லாமிய சமுதாயத்தை  சேர்ந்த மாடு கடத்தல்காரர்கள் மாடுகளை இந்திய எல்லைப் பகுதியாக கடத்த ஒரு கொடூரமான மற்றும் ஆபத்தான முறையை கையாண்டு வருகின்றனர்.


எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து இறைச்சிக்காக மாடுகள் சட்டத்தை மீறி கடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக பசுக்கள் கடத்தப்படுகின்றன. இதைத் தடுக்கும் பணியை எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் செய்து வருகின்றனர். சென்ற புதன் கிழமை மட்டும் கடத்தி வரப்பட்ட 365 மாடுகளை வீரர்கள் மீட்டுள்ளனர்.


இந்த நிலையில் எல்லை பாதுகாப்பு வீரர்களை பழி வாங்கும் நோக்கத்தில் கடத்தல்காரர்கள் வீரர்கள் மீது வெடி குண்டுகளை வீசி வருகின்றனர். 2 வாரங்களுக்கு முன்பாக மூர்ஷிதாபாத் எல்லைப் பகுதியில் இருந்து 200 மீட்டர்கள் ஊடுருவி இந்திய எல்லைக்குள் நுழைந்த 25 கடத்தல்காரர்கள் அப்பகுதியில் கண்காணித்துக் கொண்டிருந்த எல்லைப் பாது காப்புப் படை போலீஸ் அனிசுர் ரகுமான் மீது அவர்கள் நாட்டு வெடி குண்டுகளை வீசியதில் அவர் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவர்கள் கோடரி, வாள் , மூங்கில் தடிகளைக் கொண்டு தாக்க முயற்சிக்கின்றனர்.


 இந்த நிலையில் நேற்று முன்தினம் இளம் மாடு ஒன்றின் கழுத்தில் அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை ஒரு அலுமினிய குப்பியில் வைத்து வாழை மட்டைகளாலும், கயிற்றாலும் மறைக்கும் வகையில் கட்டி எல்லையோரம் முர்ஷிதாபாத் அருகே உள்ள ஆற்றில் அந்த மாட்டை  வீசி எறிந்துள்ளனர். அதை காப்பாற்ற வீரர்கள் வரும் போது வெடி குண்டுகளை வெடிக்க செய்வது கடத்தல்காரர்களின் நோக்கமாக இருந்தது. ஆனால் வீரர்கள் சந்தேகம் அடைந்து அந்த மாட்டைக் காப்பாற்றியதுடன் தங்களையும் காப்பாற்றிக் கொண்டனர். இது குறித்து வீரர்கள் குறிப்பிடுகையில் கடத்தல்காரர்கள் மாடுகளை கொடுமையாக வதைப்பதும் இன்றி, மிருகத்தனமாக நடந்து கொள்கின்றனர். நாங்கள் விழிப்புடன் இருப்பதால் அவர்களால் கடத்தலில் ஈடுபட முடியவில்லை. அதனால் அவர்கள் எங்களை தாக்குகிறார்கள் என்றனர்.    


Similar News