மறக்க முடியாமா உங்களை அப்துல் கலாம்!! உங்களை நாங்கள் இழந்த நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று!!

மறக்க முடியாமா உங்களை அப்துல் கலாம்!! உங்களை நாங்கள் இழந்த நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று!!

Update: 2019-07-27 09:58 GMT


2002ம் ஆண்டு இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் பதவி வகித்தார். இவரின் பதவி காலத்தில் அனைவராலும் மிகவும் போற்றப்பட்ட குடியரசுத் தலைவராக இருந்தார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.


இந்தியாவின் ஏவுகணை மனிதன் என்று அனைவராலும் பாசத்துடன் அழைக்கப்பட்டவர் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம். இவர் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி ஷில்லாங் பகுதியில் உயிரிழந்தார். இவரின் மரணம் ஒட்டு மொத்த இந்தியாவை உலுக்கியது. 


இந்தியாவின் இளைஞர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் அப்துல் கலாம். இதற்கு காரணம் அவர் இளைஞர்கள்மீது வைத்திருந்த நம்பிக்கைதான். அவர் இளைஞர்களிடம் கனவு காணுங்கள் எனக் கூறி பின்னர் அந்தக் கனவை நிஜமாக்க பாடுபடுங்கள் என்று அறிவுறுத்தினார். அவரின் இந்த வாக்கியம் இளைஞர்கள் பலருக்கு புதிய உத்வேகத்தை அளித்தது. 


தான் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த போதிலும் பெரும்பான்மை இந்துக்கள் கடைபிடிக்கும் இந்து சமயத்தை ஒரு மதமாக பார்க்காமல் அதை வாழ்வியல் மார்க்கமாக பாவித்து தன்னையும் இந்த புவிக்கேற்ற மனிதனாக மாற்றிக் கொண்டு ஒரு சிறந்த துறவியைப் போன்று எளிய, சைவ வாழ்வு வாழ்ந்தார். அதனால் பலதரப்பட்ட மக்களின் அன்புக்கு பாத்திரமானார். அனைவருக்கும் பொதுவான மா மனிதராக கருதப்பட்டார். இந்த மேன்மை மிக்க தகுதிகளால் வாஜ்பாய், எல்.கே.அத்வானி போன்ற தேசிய பெருந்தலைவர்களின் அன்புக்கு பாத்திரமாகி நாட்டின் மிக உயர்ந்த ஜனாதிபதி பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டார்.         


2002ம் ஆண்டு இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் பதவி ஏற்றார்.. இவரின் பதவி காலத்தில் அனைவராலும் மிகவும் போற்றப்பட்ட குடியரசுத் தலைவராக இருந்தார். பிரமாண்டமான குடியரசு தலைவர் மாளிகையில் வாழ்ந்தாலும் சாதாரண இந்திய பிரஜையாக எளிமையாக வாழ்ந்து காட்டினார்.


ஏனென்றால் அவர் குடியரசுத் தலைவராக இருந்த போதும் மாணவர்களை சந்திப்பது, அவர்களுடன் உரையாடுவது போன்ற செயல்களை செய்ய தவறியதிவில்லை. அதேபோல அவர் குடியரசுத் தலைவராக இருந்த போது நகர்புற வசதிகளை கிராமங்களுக்கு கொண்டு வருவது(PURA) குறித்து அப்போதைய மத்திய அரசுடன் தீவிரமாக ஆலோசித்து செயல்பாட்டுக்கும் கொண்டு வந்தார்.


மேலும் இவர் இந்தியா 2020 என்ற கனவு திட்டத்தையும் முன்வைத்திருந்தார். நாம் அதை நோக்கி பயனிப்பதே அவருக்கு நாம் கொடுக்கும் அஞ்சலியாக இருக்கும். இவரின் நினைவு நாளான இன்று ட்விட்டரில் மக்கள் அனைவரும் என்ற ஹேஸ்டேக்கில் இவர் குறித்து பதிவிட்டுவருகின்றனர். இந்திய அளவில் அது டிரெண்டாகி வருகிறது. 


Similar News