உத்திர பிரதேசத்தில் தேசிய கீதத்தை அவமதித்த மூன்று வாலிபர்கள் மீது வழக்கு
உத்திரபிரதேசத்தில் தேசிய கீதத்தை அவமதித்த மூன்று வாலிபர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உத்திரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்திற்கு உட்பட்ட இட்கா பகுதியில் 3 இளைஞர்கள் தேசிய கீதத்தை அவமதிப்பது போன்ற வீடியோ பதிவு ஒன்று மாநிலம் முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதாவது தேசிய கீதம் ஒலிக்கும் போது முதலில் சல்யூட் அடிக்கும் அந்த இளைஞர்கள் பின்னர் ஆபாசமாக நடனம் ஆடுவது போன்று அந்த வீடியோ உள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த வீடியோவில் இருந்தவர்கள் இட்கா பகுதியைச் சேர்ந்த அட்னான்,ருகால் மற்றும் ஒருவர் என மூன்று நண்பர்கள் என தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன் அதில் அட்னானைப் பிடித்து விசாரித்தும் வருகின்றனர். மூன்று வாலிபர்கள் தேசிய கீதத்தை அவமதித்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.